Published : 06 Nov 2019 08:53 AM
Last Updated : 06 Nov 2019 08:53 AM
மேஷம்: எதிர்பார்ப்புகள் மளமளவென்று நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். புது பொறுப்புகள் ஏற்பீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.
ரிஷபம்: கடந்தகால இனிய சம்பவங்கள் மனதில் நிழலாடும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும்.
மிதுனம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.
கடகம்: சிலரின் விமர்சனங்களுக்கும், கேலி பேச்சுக்கும் ஆளாவீர்கள். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டாம். பண விஷயத்தில் சாதுர்யமாகப் பேசி சமாளிப்பீர்கள்.
சிம்மம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பும், உதவியும் கிடைக்கும்.
துலாம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். பணவரவு உண்டு.
விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். வீடு, வாகன பராமரிப்புச் செலவு உண்டு. கடனைத் தீர்க்கும் வழிகளை யோசிப்பீர்கள்.
தனுசு: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மனைவிவழியில் அந்தஸ்து உயரும். வெளியூரில் இருந்து இனிய செய்தி வரும்.
மகரம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கடனாகக் கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள்.
கும்பம்: வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். உறவினர், நண்பர்களால் செலவுகள் அதிகரிக்கும். திருமண பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கும்.
மீனம்: கணவன் - மனைவிக்குள் கருத்துவேறுபாடு வந்து நீங்கும். யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. கடன் வாங்கும் சூழல் ஏற்படும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT