Published : 18 Oct 2019 08:30 AM
Last Updated : 18 Oct 2019 08:30 AM
மேஷம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பழைய வாகனத்தை விற்று புது வாகனம் வாங்குவீர்கள். திடீர் பயணம் உண்டு. பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.
ரிஷபம்: கனவுத் தொல்லை வரும். பழைய கசப்பான சம்பவங்களை நினைத்து அவ்வப்போது வருந்துவீர்கள். முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்க நேரிடும். திடீர் பயணம் ஏற்படலாம்.
மிதுனம்: எதிர்மறை எண்ணங்கள் தோன்றும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை அறிந்து கொள்வீர்கள். கணவன் - மனைவிக்குள் சின்ன சின்ன சச்சரவுகள், மனஸ்தாபங்கள் ஏற்படும்.
கடகம்: எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணவரவு உண்டு. விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.
சிம்மம்: அழகு, இளமை கூடும். எதிர்மறை எண்ணங்கள் விலகும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். நீண்டகாலப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழி பிறக்கும்.
கன்னி: ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மூத்த சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். வருமானம் உயரும். எதிர்பாராத தொகை கைக்கு வரும். கலைப்பொருட்கள் சேரும்.
துலாம்: பிள்ளைகளுடன் வாக்குவாதம் ஏற்படக் கூடும். அவர்களின் நட்பு வட்டத்தை கண்காணிப்பது நல்லது. அக்கம்பக்கத்தினருடன் அளவுடன் பழகுங்கள். வாகனம் செலவு வைக்கும்.
விருச்சிகம்: கல்யாணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் உங்களின் சகிப்புத் தன்மையை பாராட்டுவார்கள். பால்ய நண்பர்களின் சந்திப்பால் உற்சாகமடைவீர்கள்.
தனுசு: அக்கம்பக்கத்து வீட்டாருடன் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். சகோதரர்களுக்கு இடையே மனம்விட்டுப் பேசுவீர்கள். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.
மகரம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். வாகனப் பழுதை நீக்குவீர்கள். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புண்ணிய தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.
கும்பம்: மனக்குழப்பங்கள், வீண் விவாதங்கள் நீங்கும். எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவது குறித்து ஆலோசிப்பீர்கள். பணவரவு உண்டு.
மீனம்: ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். திடீர் பணவரவு உண்டு.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT