Published : 01 Oct 2019 09:04 AM
Last Updated : 01 Oct 2019 09:04 AM
மேஷம்: சமூகத்தில் பிரபலமானவர்களின் ஆதரவு கிடைக்கும். மனைவிவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்தி தரும்.
ரிஷபம்: பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நீண்டகால சிக்கல்களைத் தீர்க்க நல்லவர்களின் ஆலோசனைகளும், உதவியும் கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு.
மிதுனம்: உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். பிள்ளைகளாலும் மகிழ்ச்சி உண்டாகும். கலைப்பொருட்கள் சேரும்.
கடகம்: மனதில் தைரியம் பிறக்கும். திட்டவட்டமாக, தெளிவாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். திடீர் பயணம் உண்டு.
சிம்மம்: விலை உயர்ந்த பொருட்கள், ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். கண்டும் காணாமல் சென்றவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
கன்னி: எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். நட்பு வட்டம் விரியும். உறவினர்கள், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
துலாம்: பேச்சில் கடுமையான சொற்கள் வேண்டாம். சொல்ல வருவதை நாசூக்காகவும், மென்மையாகவும் சொல்லுங்கள். உறவினர், நண்பர்களின் திடீர் வருகையால் வீடு களைகட்டும்.
விருச்சிகம்: பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவி கிடைக்கும். அயல்நாட்டில் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். அக்கம்பக்கத்தினரின் அன்பு தொல்லை உண்டு.
தனுசு: எத்தனை தடைகள், இடர்கள் ஏற்பட்டாலும் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டை உங்கள் ரசனைக்கேற்ப சீரமைப்பீர்கள்.
மகரம்: விலகியிருந்த பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். இழுபறியாக இருந்த சொத்து பிரச்சினை சுமுகமாக முடியும்.
கும்பம்: வேலைச்சுமை குறையும். வழக்குகள் சாதகமாகும். ஆரோக்கியம், அழகு கூடும். பெற்றோருடன் இருந்துவந்த கருத்துவேறுபாடு விலகும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
மீனம்: வாகனம் அவ்வப்போது செலவு வைக்கும். வீட்டின் பராமரிப்புச் செலவும் திட்டமிட்டதைவிட அதிகரிக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT