Published : 04 Sep 2019 08:17 AM
Last Updated : 04 Sep 2019 08:17 AM
மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள்.
ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.
மிதுனம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனதில் நிலவிய குழப்பங்கள் நீங்கும். கணவன் - மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடுகள் விலகும்.
கடகம்: சவால்கள், ஏமாற்றங்களைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவீர்கள். நீண்டகால கடனை பைசல் செய்வதற்கான வழி பிறக்கும்.
சிம்மம்: வெளியூரிலிருந்து எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.
கன்னி: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லைகள் அகலும். விருந்தினர் வருகை உண்டு.
துலாம்: படபடப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். தாழ்வுமனப்பான்மை அடிக்கடி தலைகாட்டும். வீடு பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
விருச்சிகம்: குடும்பத்தினரிடையே வீண் விவாதம் ஏற்படக்கூடும். யாரையும் அநாவசியமாக பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரர் வகையில் மனத்தாங்கல் வரும். கலைப்பொருட்கள் சேரும்.
தனுசு: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல்நிலை சீராக இருக்கும்.
மகரம்: தாமதமாகிய காரியங்களெல்லாம் இன்று சுமுகமாக முடியும். சொந்தபந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களின் நடவடிக்கைகளில் புத்திசாலித்தனம் வெளிப்படும்.
கும்பம்: வீண்செலவுகளைத் தவிர்த்து சேமிக்கும் எண்ணம் வரும். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.
மீனம்: எந்தக் காரியத்தை தொட்டாலும் பல முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT