Published : 21 Aug 2019 08:43 AM
Last Updated : 21 Aug 2019 08:43 AM
மேஷம்: குடும்ப விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதால் சச்சரவுகளில் சிக்குவீர்கள். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
ரிஷபம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் சிலர் பண உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையறிந்து செயல்படுவார்கள்.
மிதுனம்: துடிப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். விருந்தினர்கள், நண்பர்களின் திடீர் வருகையால் வீட்டில் குதூகலம் உண்டாகும்.
கடகம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தினருடன் இருந்துவந்த கசப்புணர்வு நீங்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். திடீர் பயணம் ஏற்படலாம்.
சிம்மம்: பழைய இனிய சம்பவங்களை நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் நினைவாற்றல் பெருகும். மகளின் கல்யாணப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் தருவதாக அமையும்.
கன்னி: வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள்.
துலாம்: ஆரவாரமின்றி சில வேலைகளை கச்சிதமாக முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தன்னம்பிக்கை துளிர்விடும்.
விருச்சிகம்: நம்பிக்கைக்கு உரியவர்களின் ஆதரவு கிட்டும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. பணவரவு திருப்திகரமாக இருக்கும். வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும்.
தனுசு: அதிரடியாக செயல்பட்டு சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு உண்டு. அரசாங்க காரியங்களில் வெற்றியுண்டு.
மகரம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் நீண்டநாள் கோரிக்கைகளை நிறைவேற்றுவீர்கள். நீண்டநாட்களாக எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும்.
கும்பம்: சகோதரர் வகையில் ஆதாயம் பெறுவீர்கள். உறவினர்களால் மகிழ்ச்சியுண்டு. நட்பு வட்டம் விரியும். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும்.
மீனம்: குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். நண்பர்கள், உறவினர்களின் உதவி கிட்டும். சகோதரர் வகையில் மகிழ்ச்சியுண்டு. அக்கம்பக்கத்து வீட்டாரின் ஆதரவு பெருகும்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT