Published : 18 Aug 2019 09:42 AM
Last Updated : 18 Aug 2019 09:42 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: தடைபட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றுக்கு உங்கள் அவசர முடிவுகள்தான் காரணம் என்பதை உணர்வீர்கள். திடீர் பயணம் உண்டு.

ரிஷபம்: கவுரவப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பூர்வீக சொத்தை மாற்றியமைப்பீர்கள். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். விருந்தினர் வருகை உண்டு.

மிதுனம்: எதிரிகள் நண்பர்களாவார்கள். சில பிரச்சினைகளுக்கு திடமான முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டு. அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.

கடகம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

சிம்மம்: கணவன் - மனைவிக்குள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வாகனத்தை கவனமாக இயக்குங்கள். மின்னணு, மின்சார சாதனங்கள் திடீரென பழுதாகும்.

கன்னி: தடைபட்ட வேலைகள் முடியும். டி.வி., வாஷிங்மெஷின் போன்ற சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். விலகியிருந்த சொந்த பந்தங்கள் தேடி வருவார்கள். பணவரவு திருப்தி தரும்.

துலாம்: மனதை உறுத்திக் கொண்டிருந்த குழப்பங்களுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு கலகலப் பாகும். பிள்ளைகளின் எண்ணங்களை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்: உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன் யம் அதிகரிக்கும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுவீர்கள்.

தனுசு: தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். கேட்ட இடத்தில் பணம், உதவி கிடைக்கும்.

மகரம்: எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வரும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். அநாவசிய செலவுகளைத் தவிர்ப்பீர்கள்.

கும்பம்: புதிய திட்டங்கள் மளமளவென்று நிறைவேறும். எதிர்த்தவர் கள் நண்பர்களாவார்கள். குடும்பத்தினரின் எண்ணங்களையும், ஆசைகளையும் உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள்.

மீனம்: வருங்காலத்தைப் பற்றிய கவலைகள் ஏற்படும். சிறுசிறு ஏமாற்றங்களும் வரக்கூடும். கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x