Published : 16 Aug 2019 08:14 AM
Last Updated : 16 Aug 2019 08:14 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உங்கள் ரசனைக்கேற்ற வீடு, இடம் அமையும். சகோதர, சகோதரிகள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினை தீரும். குடும்பத்தில் சுபகாரியங்களுக்கு ஏற்பாடாகும்.

ரிஷபம்: இழுபறியாக இருந்துவந்த வேலைகள் முடிவடை யும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். வெளிநாட்டி லிருப்பவர்களால் ஆதாயம் உண்டு. திடீர் பயணம் ஏற்படலாம்.

மிதுனம்: தொலைநோக்கு சிந்தனையுடன் பழைய பிரச்சினை களுக்கு தீர்வு காண்பீர்கள். மனைவிவழியில் செல்வாக்கு கூடும். திருமண பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும்.

கடகம்: நெருப்பு சம்பந்தப்பட்ட இடங்களில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. இரத்த அழுத்தத்தை அடிக்கடி பரிசோதித்துக் கொள்ளுங்கள்.. சகோதரர்கள் மத்தியில் அதிருப்தி நிலவும்.

சிம்மம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வெற்றி பெற்ற மனிதர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.

கன்னி: சவால்களில் வெற்றி பெறுவீர்கள். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். வழக்கு சாதகமாகும். அரசாங்க விஷயம் விரைந்து முடியும். பணவரவு திருப்தி தரும்.

துலாம்: உறவினர், நண்பர்களுடன் இருந்துவந்த மோதல் நீங்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி பிறக்கும். வேற்றுமொழி பேசுபவர்களால் நன்மைகள் ஏற்படும்.

விருச்சிகம்: மனப்போராட்டம் விலகி நிம்மதி ஏற்படும். குழம்பிக் கொண்டிருந்த விஷயத்தில் தெளிவு பிறக்கும். ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தை காப்பாற்றுவீர்கள். திடீர் பயணம் உண்டு.

தனுசு: தன்னம்பிக்கை பிறக்கும். கம்பீரமாகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகும். தங்க நகைகள் வாங்குவீர்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவு உண்டு.

மகரம்: பிரச்சினைகளின் ஆணிவேரைக் கண்டறிந்து களைவீர்கள். எங்கு சென்றாலும் மதிப்பு, மரியாதை கூடும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

கும்பம்: வீடு, மனை வாங்கும்போது வில்லங்கம் ஏதேனும் இருக்கிறதா என பார்த்து வாங்குங்கள். வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள்.

மீனம்: சின்னச் சின்ன காரியங்களைக் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. வெளியூரில் இருந்து எதிர்பார்த்திருந்த செய்தி வரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x