Published : 15 Aug 2019 09:55 AM
Last Updated : 15 Aug 2019 09:55 AM
மேஷம்: அடிக்கடி தொந்தரவு தந்த வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள். சமூகத்தில் பிரபலமானவர்கள் அறிமுகமாவார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
ரிஷபம்: எந்தப் பிரச்சினையையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க உதவிகள் கிடைக்கும். திடீர் பயணம் உண்டு.
மிதுனம்: உறவினர், நண்பர்களுடன் இருந்துவந்த பகை நீங்கும். இருப்பினும் ஈகோ பிரச்சினைகளும், விமர்சனங்களும் வந்து போகும். வேலைச்சுமை, பொறுப்புகள் அதிகரிக்கும்.
கடகம்: ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப் பவர்கள் அறிமுகமாவார்கள். பணவரவு உண்டு. அரைகுறையாக நின்றுபோன காரியங்கள் விரைந்து முடியும்.
சிம்மம்: உற்சாகமாகக் காணப்படுவீர்கள். விஐபிகள் வீட்டு விசேஷங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். வழக்கு விவகாரம் தீரும். அரசு காரியங்கள் சாதகமாக முடிவடையும்.
கன்னி: பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
துலாம்: எங்கு சென்றாலும் எதிர்ப்புகள் அதிகரித்ததைப் போல உணர்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். உங்களின் புது முயற்சிகளுக்கு உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
விருச்சிகம்: மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். சகோதரர்களால் நன்மை உண்டு. பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.
தனுசு: எல்லா பிரச்சினைகளையும் சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். சிலருக்கு புது வேலை கிடைக்கும். விருந்தினர் வருகை உண்டு.
மகரம்: மற்றவர்கள் உங்களைப் பற்றி குறைவாகவும், தாழ்வாகவும் நினைப்பதாக அடிக்கடி எண்ணுவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி சம்பந்தப்பட்ட குழப்பங்கள் வந்து நீங்கும்.
கும்பம்: வீண் கவுரவத்துக்காக அநாவசிய செலவுகளில் ஈடுபடா தீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். பழைய சொந்த பந்தங்களைச் சந்திப்பீர்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவு உண்டு.
மீனம்: பழைய இனிய சம்பவங்களை அடிக்கடி நினைவுகூர்ந்து மகிழ்வீர்கள். உறவினர், நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சமயோசிதமாகப் பேசி பாராட்டு பெறுவீர்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT