Published : 07 Aug 2019 07:44 AM
Last Updated : 07 Aug 2019 07:44 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிள்ளை களை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர்கள்.

ரிஷபம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வாகனத்தை சீர்செய்வீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.

மிதுனம்: சாதுர்யமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். மனக்குழப்பங்கள் விலகும். கணவன் - மனைவிக்குள் நிலவிய கருத்துவேறுபாடு நீங்கும். திடீர் பயணம் உண்டாகும்.

கடகம்: சவால்கள், ஏமாற்றங்களைத் தாண்டி வெற்றி பெறுவீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. நீண்டகாலக் கடனை பைசல் செய்வதற்கு வழி பிறக்கும்.

சிம்மம்: வெளியூரிலிருந்து எதிர்பார்த்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தினருடன் கலந்துரையாடி முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் அதரவு கிட்டும்.

கன்னி: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களால் இருந்துவந்த தொல்லைகள் அகலும். பால்ய நண்பரை எதிர்பாராது சந்திப்பீர்கள்.

துலாம்: ஒருவித படபடப்பு ஏற்படும். கணவன் - மனைவிக்குள் ஈகோ பிரச்சினை வந்து நீங்கும். தாழ்வுமனப்பான்மை அவ்வப்போது தலைதூக்கும். அடுத்தவர் விவகாரங்களில் தலையிடாதீர்கள்.

விருச்சிகம்: கணவன் - மனைவிக்குள் வீண் விவாதம் ஏற்படும். யாரையும் அநாவசியமாகப் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதரர் வகையில் மனத்தாங்கல் வரும். காரியத் தடை ஏற்படும்.

தனுசு: விருந்தினர் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல்நிலை சீராக இருக்கும்.

மகரம்: தடைபட்டு வந்த காரியங்கள் எல்லாம் இன்று முடியும். சொந்தபந்தங்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களது நடவடிக்கைகளில் புத்திசாலித்தனம் வெளிப்படும்.

கும்பம்: வீண்செலவுகளைத் தவிர்த்து சேமிக்கும் வழிகளை யோசிப்பீர்கள். பேச்சில் தன்னம்பிக்கை பிறக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பணவரவு திருப்தி தரும்.

மீனம்: எந்த காரியத்தைத் தொட்டாலும் பல முறை முயன்று முடிக்க வேண்டிய நிலை ஏற்படும். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x