Published : 06 Aug 2019 08:39 AM
Last Updated : 06 Aug 2019 08:39 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: அதிரடி திட்டங்களைத் தீட்டுவீர்கள். பணவரவு திருப்தி கரமாக இருக்கும். உங்களை தேடிவந்து சிலர் உதவி கேட்பார்கள். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். கலைப்பொருட்கள் சேரும்.

ரிஷபம்: முகப்பொலிவு கூடும். ஆக்கபூர்வமாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். விருந்தினர் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள்.

மிதுனம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசி எல்லோரையும் கவர்வீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். வருங்காலத்துக்காக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள்.

கடகம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். தைரியமான முடிவு களை எடுத்து வெற்றி காண்பீர்கள். உறவினர், நண்பர்களின் சந்திப்பு நிகழும். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

சிம்மம்: மனக்குழப்பங்கள் விலகி தெளிவான முடிவு எடுப்பீர்கள். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

கன்னி: சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாக புரிந்து கொள்வார்கள். காரியங்களில் நிதானமுடன் செயல்படவும்.

துலாம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப் பீர்கள். குடும்பத்தினரை அனுசரித்து செல்லுங்கள். அநாவசிய செலவுகளைத் தவிர்த்து சேமிக்க முயற்சி செய்யுங்கள்.

விருச்சிகம்: வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகை யுண்டு. ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்கும் எண்ணம் வரும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். 

தனுசு: உறவினர்கள் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். சகோதரர் வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவர்வீர்கள். வீடு, வாகனத்தை மாற்றுவீர்கள்.

மகரம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு, மனை வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். திடீர் பயணம் உண்டு.

கும்பம்: அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துப் போவது நல்லது. அநாவசியமாக அடுத்தவர்களை குறைகூறுவதை நிறுத்துங்கள். சாலையைக் கடக்கும்போது கவனம் தேவை.

மீனம்: துடிப்புடன் காணப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன் யோன்யம் அதிகரிக்கும். விருந்தினர்கள், நண்பர்களின் வருகை யால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x