Published : 04 Aug 2019 09:43 AM
Last Updated : 04 Aug 2019 09:43 AM

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: உறவினர்கள், நண்பர்கள் வகையில் அனுகூலமான நிலை காணப்படும். மகளுக்கு தள்ளிப் போன திருமணம் சிறப்பாக கூடி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.

ரிஷபம்: வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அடிமனதில் நிலவிய தாழ்வு மனப்பான்மை நீங்கும். சோம்பல் நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.

மிதுனம்: தொட்ட காரியங்கள் எல்லாம் துலங்கும். தனிப்பட்ட முறையில் சில முக்கிய முடிவுகளை தைரியமாக எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு, மதிப்பு, மரியாதை கூடும்.

கடகம்: எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பெரியோரின் ஆசியும், ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளால் மனநிம்மதி உண்டு கல்யாண முயற்சிகள் நல்ல விதத்தில் முடியும்.

சிம்மம்: சோர்வு, களைப்பு வந்து நீங்கும். வீண்பழிச் சொல்லுக்கு ஆளாகக் கூடும். புதிய வாய்ப்புகளை தீர யோசித்து முடிவெடுப்பது நல்லது. வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும்.

கன்னி: சுபச் செலவுகள் உண்டாகும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். முக்கிய காரியங்களில் முன்னெச் சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பணவரவு திருப்தி தரும்.

துலாம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியுண்டாகும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். புது திட்டங்கள் தீட்டுவீர்கள். தியானம், யோகா, ஆன்மிகம் இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.

விருச்சிகம்: திடீர் பணவரவு உண்டு. வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள். சகோதரர் வகையில் உதவியுண்டு. வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.

தனுசு: எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். தந்தையின் உடல்நலம் சீராகும். புதிய பொறுப்புகள் தேடி வரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர்கள். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை உண்டு.

மகரம்: வீண் விரயம், டென்ஷன், பிள்ளைகளால் பொருட்செலவு வரக்கூடும். வாகனம் பழுதாகும். சொத்துப் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். கலைப்பொருட்கள் சேரும்.

கும்பம்: வரவேண்டிய பணம் கைக்கு வரும். குலதெய்வ கோயி லுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். சுபச் செலவுகள் அதிகரிக்கும். மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டு.

மீனம்: மறைமுக எதிர்ப்புகளை சாதுர்யமாக வெல்வீர்கள். கணவன் - மனைவிக்குள் நிலவி வந்த பனிப்போர் மறையும். ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். திடீர் பயணம் உண்டு.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x