Published : 30 Jul 2019 08:39 AM
Last Updated : 30 Jul 2019 08:39 AM
மேஷம்: எதிலும் முன்னேற்றம் உண்டு. தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சொந்தபந்தங்களுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும்.
ரிஷபம்: விருந்தினர் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழல் உருவாகும். உங்களுடைய ஆலோசனையை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.
மிதுனம்: தாயாருடன் எதிர்பாராத வகையில் மனத்தாங்கல் வரக்கூடும். வாகனத்தில் செல்லும்போதும், சாலையைக் கடக்கும்போதும் கவனம் தேவை. மின்சார சாதனங்கள் பழுதாகும்.
கடகம்: சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்படாதீர்கள். எதிர்பார்த்த தொகை தாமதமாக வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். அக்கம்பக்கத்தினர் ஆதரவு உண்டு.
சிம்மம்: தொட்ட காரியங்கள் துலங்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வீடு கட்டுவதற்கான வேலைகளில் தீவிரம் காட்டுவீர்கள்.
கன்னி: உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக முடித்துக் காட்டுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். பணவரவு உண்டு.
துலாம்: தந்தைவழியில் உதவிகள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். புண்ணிய காரியங்கள், சுபகாரியங்களுக்கு தலைமை தாங்குவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
விருச்சிகம்: வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் எதிர்பார்த்ததைவிட அதிகரிக்கும். கணவன் - மனைவி இடையே வீண் சந்தேகத்தால் கருத்து மோதல், பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
தனுசு: மகிழ்ச்சியான சம்பவங்கள் குடும்பத்தில் அடுத்தடுத்து நிகழும். கல்யாணப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் உண்டு. பழைய வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள்.
மகரம்: மனைவிவழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் நல்ல விதத்தில் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை உண்டு. புது வாகனம் வாங்குவீர்கள்.
கும்பம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விலகியிருந்த பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். உறவினர்கள் மூலம் சில உதவிகள் கிட்டும். தெய்வீக சிந்தனைகள் அதிகரிக்கும்.
மீனம்: ஆன்மிக ஆற்றல் கிடைக்கும். எதிர்காலத்தை ஓரளவு உணரும் சக்தியைப் பெறுவீர்கள். மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும். வெளிவட்டாரத்தில் எல்லோரும் மதிப்பார்கள்.
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT