Published : 21 Jul 2019 08:27 AM
Last Updated : 21 Jul 2019 08:27 AM
மேஷம்: விடாப்பிடியாக செயல்பட்டு காரியங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவிக்குள் மனம்விட்டு பேசுவீர்கள். சகோதரர் வகையில் நன்மை கிட்டும். பணவரவு திருப்தி தரும்.
ரிஷபம்: சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சமூகத்தில் பெரிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும்.
மிதுனம்: கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். பிள்ளைகளின் தேவைகளுக்கு முக்கியத்துவம் தருவீர்கள்.
கடகம்: கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து போவது நல்லது. வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. மின்னணு, மின்சார சாதனங்கள் பழுதாகும். திடீர் பயணம் உண்டு.
சிம்மம்: திடமாக சில முடிவுகள் எடுப்பீர்கள். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வரவேண்டிய பணம் வரும். மனைவிவழி உறவினர்களால் நன்மை உண்டு.
கன்னி: தடைகளைத் தாண்டி முன்னேறுவீர்கள். சமூகத்தில் பிரபலமானவர்களின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.
துலாம்: உறவினர்கள், நண்பர்கள் வீட்டு சுபகாரியங்களில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். புது வீடு, மனை வாங்குவீர்கள். கலை, இசை போன்றவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.
விருச்சிகம்: நெடுநாட்களாகத் திட்டமிட்டுக் கொண்டிருந்த காரியம் கைகூடி வரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். விலை உயர்ந்த நகைகள், ஆடைகள் வாங்குவீர்கள்.
தனுசு: கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். புது வேலை கிடைக்கும். பூர்விகச் சொத்துகள் கைக்கு வரும். பிள்ளைகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வார்கள்.
மகரம்: பணவரவு திருப்திகரமாக இருக்கும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகளின் கூடாப் பழக்கவழக்கம் விலகும். பால்ய நண்பரைச் சந்திப்பீர்கள்.
கும்பம்: வீண் பகை, விரயச் செலவு, முன்கோபம், திடீர் பயணங்கள் வந்து செல்லும். அரசாங்க அதிகாரிகளை அநாவசியமாகப் பகைத்துக் கொள்ளாதீர்கள். வாகனம் செலவு வைக்கும்.
மீனம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். பிள்ளைகளால் அலைச்சல் உண்டு. அக்கம்பக்கத்தினர் சிலரின் செயல்பாடுகள் கோபம், எரிச்சலை உண்டாக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT