Published : 17 May 2025 06:08 AM
Last Updated : 17 May 2025 06:08 AM

இந்த நாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: குடும்பத்தில் நிலவி வந்த காரசாரமான விவாதங்கள் மறையும். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமையடைவீர். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர். உத்தியோகத்தில் உயரதிகாரி நேசக்கரம் நீட்டுவார்.

ரிஷபம்: புதியவர்கள் நண்பர்களாவர். பணவரவு திருப்தி தரும். கொடுக்கல்-வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களால் சரக்குகள் விற்றுத் தீரும்.

மிதுனம்: மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் நிதானம் தேவை. புதிய பங்குதாரர்களின் ஆலோசனையைக் கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும்.

கடகம்: கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். தொழிலில் போட்டிகள் குறையும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.

சிம்மம்: வெளிவட்டாரத்தில் புதியவர்களின் நட்பு கிடைக்கும். தள்ளிப் போன வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். புதியவர்கள் அறிமுகமாவர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

கன்னி: பழைய பிரச்சினைக்கு புது தீர்வு கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவரின் அறிமுகம் கிட்டும். வெளியூரிலிருந்து நற்செய்தி வரும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

துலாம்: உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வர். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரரீதியாக அதிகாரப் பதவியில் இருப்பவர்களை சந்திப்பீர். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.

விருச்சிகம்: மனப் போராட்டம் ஓயும். சமயோஜிதமான பேச்சால் தடைபட்ட வேலைகளை முடிப்பீர். பணப் பற்றாக்குறை நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். வியாபாரப் போட்டி குறையும். உத்தியோகம் சிறக்கும்.

தனுசு: குடும்பத்தில் வீண் விவாதங்கள் வந்து போகும். தாயாரின் உடல்நிலை சீராகும். பயணங்கள் அலைச்சல் தரும். வியாபாரத்தில் அவசர முடிவு எடுக்க வேண்டாம். அலுவலகத்தில் அனைவரையும் அனுசரித்து நடக்கவும்.

மகரம்: பழைய கடனை நினைத்து வருந்த வேண்டாம். புதுவழி பிறக்கும். மின் சாதனங்களை மாற்றியமைக்கும் முயற்சியில் இறங்குவீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆதரவுண்டு.

கும்பம்: தொட்டது அனைத்தும் துலங்கும். தடைகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலை முடிவடையும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களும் உடனடியாக நிறைவேறும். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.

மீனம்: பழைய பிரச்சினைக்கு தீர்வுண்டு. குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பிள்ளைகளால் பெருமையடைவீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். உத்தியோகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x