Published : 13 May 2021 03:12 AM
Last Updated : 13 May 2021 03:12 AM
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சரண்யா அறி அறிக்கை: தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களில் சேகரமாகும் குப்பைகள் மாநகராட்சி தூய்மை பணியாளர்களால் பெறப்பட்டு, நாள்தோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பைஎன தரம் பிரிக்கப்பட்டு, முறையாக அகற்றப்பட்டு வருகிறது.
திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தர வேண்டியது உபயோகிப்பாளரின் கடமை. எனவே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உருவாகும் குப்பைகள் மற்றும் கழிவுகளை உரியவாறு மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து மாநகராட்சி தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
தற்போது கரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் குப்பைகளை முறையாக அகற்ற வேண்டியது அவசியம். கரோனா தொற்றால்பாதிக்கப்பட்டோரின் வீடுகளில் இருந்து பிரதி வாரம் செவ்வாய் மற்றும் சனிக்கிழமை மட்டும் குப்பைகள் மாநகராட்சி தூய்மை பணியாளர்களால் பெறப்படுகின்றன.
மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து வழங்காவிட்டால் குப்பைகள் சேகரிக்கப்படமாட்டாது. குப்பைகளை தரம்பிரித்து தராத நபர்கள் மீது திடக்கழிவு மேலாண்மை விதி மற்றும் பொது சுகாதார விதிகளின் கீழ் அபராதம் மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT