Published : 11 May 2021 03:12 AM
Last Updated : 11 May 2021 03:12 AM
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் அறிக்கை: தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (மே 11) காய்ச்சல் சிறப்பு பரி சோதனை முகாம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலை 9 மணி முதல் 11 மணி வரைதென்றல் நகர் மெயின், பத்திரகாளியம்மன் கோயில் தெரு, ஹவுசிங்போர்டு 2-வது தெரு, சின்ன கண்ணுபுரம், மாசிலாமணிபுரம் 3-வது தெரு பகுதிகளிலும், காலை 11 மணி முதல் 1 மணிவரை எழில் நகர், ரத்தினபுரம்பள்ளி அருகில், போல்பேட்டை மெயின், விஎம்எஸ் நகர் தெற்கு, டூவிபுரம் 4-வது தெரு பகுதிகளிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை ராஜீவ் நகர் 1-வது தெரு, எஸ்எஸ் மாணிக்கபுரம், அம்பேத்கர் நகர் மெயின், செல்வ விநாயகபுரம், அண்ணாநகர் 3-வது தெரு பகுதிகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும்.
கோவில்பட்டி நகராட்சியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை அஞ்சல் அலுவலக தெரு பகுதியிலும், காலை 11 மணி முதல் 1 மணி வரை எட்டயபுரம் சாலை கனரா வங்கி பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை பாரதி நகர் பகுதியிலும், காயல்பட்டினம் நகராட்சியில் காலை 9 மணி முதல் 11 மணி வரை முத்தம்மாள்புரம் கோயில் தெரு பகுதியிலும், காலை 11 மணி முதல் 1 மணி வரை டிசிஆர் அமலி நகர் பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை டிசிஆர் பூந்தோட்டம் பகுதியிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும்.
மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் காலை 9 மணி முதல் 11 மணி வரை ஆரோக்கியபுரம், கோட்டைகாடு, ஆழிகுடி, அரியநாயகிபுரம், சுனாமி நகர், ஆலந்தலை, நாசரேத் கனகராஜ் தெரு, நெய்விளை, கல்லாமொழி, குருநாதபுரம், சாத்தான்குளம் கொத்துவா பள்ளிவாசல், நெடுங்குளம் அங்கன்வாடி, பிள்ளையார்நத்தம், காளம்பட்டி, ஊசி மீசியாபுரம், மலைப்பட்டி, மேலநம்பியாபுரம் பகுதிகளிலும், 11 மணிமுதல் 1 மணி வரை தாளமுத்துநகர், வலசக்காரன்விளை, அனவரதநல்லூர், செய்துங்கநல்லூர், திருச்செந்தூர் தெற்கு ரத வீதி, பசுவந்தனை, கீழநம்பியாபுரம் பகுதிகளிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை கோரம்பள்ளம், ராமசாமிபுரம், வசவப்பபுரம் பள்ளி தெரு, விட்டிலாபுரம், திருச்செந்தூர் ஜீவாநகர், கோமந்தா நகர், பால்குளம், தேரியூர், பரமன்குறிச்சி என்எஸ்கே தெரு, சாத்தான்குளம் செல்வவிநாயகர் கோயில் தெரு, வேலன்புதுக்குளம், பொன்னையாபுரம் பகுதிகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT