Published : 28 Apr 2021 03:14 AM
Last Updated : 28 Apr 2021 03:14 AM

கபசுர குடிநீர் வழங்கல் :

திருநெல்வேலி

திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளா கத்தில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி தொடங்கி வைத்தார். பல்கலைக்கழக நுழை வாயிலில் தினமும் காலை 9 மணி முதல் 11 மணிவரை இலவசமாக கபசுர குடிநீர் வழங்கப்படும் என்று தெரிவித்தார். பதிவாளர் மருதகுட்டி, சுகாதார மைய இயக்குநர் நிவாஸ், வளாக மேம்பாட்டு இயக்குநர் சேது உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருநெல்வேலி நயினார்குளம் மார்க்கெட்டில் திமுக சார்பில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அங்குள்ள வியாபாரிகளுக்கும் பொது மக்களுக்கும் மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் அப்துல் வகாப், திருநெல்வேலி சட்டப் பேரவை உறுப்பினர் ஏஎல்எஸ் லட்சுமணன் ஆகியோர் கபசுர குடிநீர் வழங்கினர்.

திருநெல்வேலி மாநகராட்சி, பொது நூலகத்துறை, மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம், இணைந்து பொதுமக்களுக்கும், வாசகர் களுக்கும் கபசுர குடிநீர் வழங்கியது. மாவட்ட நூலக அலுவலர் லெ.மீனாட்சிசுந்தரம் தலைமை வகித்தார். மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் தொடங்கிவைத்தார். சீட் அறக்கட்டளை நிறுவனர் பொன்னம்பலம் உட்பட பலர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x