Published : 21 May 2021 03:13 AM
Last Updated : 21 May 2021 03:13 AM

விளை பொருட்களை விற்பனைக்கு எடுத்துச் செல்ல தொடர்பு எண்கள் அறிவிப்பு : தோட்டக்கலைத் துறை அலுவலகங்களில் உடனடியாக அனுமதி

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட தோடடக்கலைத் துறை துணை இயக்குநர் எல்.சரஸ்வதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக தமிழகத்தில் சில தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஞாயிக்கிழமை தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதனால் விவசாயிகள் அன்றைய தினம் காய்கறி விற்பனை செய்ய முடியாது.

எனவே, திங்கள் முதல் வெள்ளி வரை உள்ள நாட்களில் மட்டும் காய்கறிகளை அறுவடை செய்து விற்பனைக்கு கொண்டு வர வேண்டும். விளை பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி சீட்டு அல்லது விற்பனை செய்ய உதவி தேவைப்பட்டால், விவசாயிகள் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை தொடர்பு கொள்ளலாம்.

அவர்களது தொடர்பு எண்கள்: திருச்செந்தூர் மற்றும் உடன்குடி - 9092861549, விளாத்திகுளம் - 9600342052, சாத்தான்குளம் - 7639516199, வைகுண்டம் மற்றும் ஆழ்வார்திருநகரி - 8807653887, புதூர் - 9750549687, ஓட்டப்பிடாரம் - 9976531000, கயத்தாறு - 9791577112, கருங் குளம் - 7598415390, தூத்துக்குடி - 6374275754, கோவில்பட்டி - 9750549687.

தென்காசி

தென்காசி மாவட்ட தோட்டக் கலை துணை இயக்குநர் சு.ஜெயபாரதி மாலதி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டு வரும் காய்கறிகள், பழங்கள், மலர்கள், நறுமண மற்றும் வாசனை திரவிய பயிர்கள் உள்ளிட்ட விளைபொருட்களை பிற மாவட்டங்களுக்கு கொண்டு செல்ல, வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலகங்களில் உடனடியாக அனுமதிச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம்.

விவசாயிகள், உரிய விவரங்களோடு தங்களது வட்டார உதவி இயக்குநர்களை தொடர்பு கொண்டால் உடனடியாக அனுமதிச்சீட்டு வழங்கப்படும். வட்டார உதவி இயக்குநர்களின் அலைபேசி எண்கள்: ஆலங்குளம் 93605 98993, கடையம் 86100 22623, கடையநல்லூர் மற்றும் செங்கோட்டை 99947 10257, சங்கரன்கோவில் 63813 64503, மேலநீலிதநல்லூர் 63697 26724, கீழப்பாவூர் மற்றும் தென்காசி 63830 50078, குருவிகுளம் 82205 47506.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x