Published : 19 May 2021 03:13 AM
Last Updated : 19 May 2021 03:13 AM

இ-பதிவு நடைமுறை - சுங்கச் சாவடிகளில் போலீஸார் கண்காணிப்பு :

சேலம் கருப்பூர் சுங்கச் சாவடி அருகே இ-பதிவு தொடர்பாக வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸார். படம்: எஸ். குரு பிரசாத்

சேலம்

கரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலை யில், சுங்கச்சாவடிகளில் போலீஸார் வாகன சோதனை மூலம் இ-பதிவு நடைமுறையை கண்காணித்து வருகின்றனர்.

கரோனா தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் அவசர அவசிய காரணத்தை தெரிவித்து இ-பதிவு செய்து அதற்கான ஆவணங்களுடன் பயணம் செய்ய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதனையடுத்து, சேலம் மாவட்டத்தில் மேட்டுப்பட்டி, கருப்பூர், மல்லூர், சங்ககிரி உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் போலீஸார் முகாமிட்டு, கண்காணிப்பு மற்றும் சோதனை பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இ-பதிவு இல்லாமல் வரும் வாகனங்களை போலீஸார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x