Published : 12 May 2021 03:14 AM
Last Updated : 12 May 2021 03:14 AM
சேலம் மாநகராட்சிப் பகுதியில் கரோனா தொற்று தடுப்பு விதிமுறைகளை மீறி இயங்கிய 6 வணிக நிறுவனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
சேலம் மாநகராட்சி அலுவலர்கள் கரோனா தொற்று தடுப்பு விதிமுறை மீறல் குறித்து தொடர்ந்து ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் (10-ம் தேதி) சேலம் மாநகர பகுதியில் மேற்கொண்ட ஆய்வில், முகக்கவசம் அணியாத 33 தனி நபர்களுக்கு தலா ரூ.200 வீதமும், சமூக இடைவெளி மற்றும் புதிய கட்டுப்பாடுகளை கடைபிடிக்காத 29 சிறு வணிக நிறுவனங்களுக்கு தலா ரூ.500 வீதமும், 7 பெரிய விற்பனை நிலையங்களுக்கு தலா ரூ.5,000 வீதமும் மொத்தம் ரூ.56 ஆயிரத்து 100 அபராதம் விதித்தனர்.
இதில் கரோனா தொற்று புதிய கட்டுப் பாடுகளை கடைபிடிக்காமல் விதி முறை மீறியதாக 6 வணிக நிறுவனங் களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT