Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM
திருநெல்வேலி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏற்கெனவே அன்று நடத்த திட்டமிட்டிருந்த திருமண விழாக்கள் வேறுதேதிக்குமாற்றப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் ஞாயிறன்றுமுழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இந்நாட்களில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் செய்வதறியாமல் திகைத்துள்ளனர். ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டுள்ள திருமணங்களை கரோனாகட்டுப்பாடு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஆனால்,ஊரடங்கு காரணமாக திருமணத்துக்கு வெளியூர்களில் இருந்து உறவினர்கள் வருவதில் சிக்கல் உள்ளதால் ஞாயிறன்று நடத்த திட்டமிட்டிருந்த திருமணங்களை வேறுதேதிக்கு மாற்றி வருகிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் வரும் 25-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பல திருமணங்கள் நடத்த திட்டமிடப்பட்டிருந்தன. இதற்காக கோயில், தேவாலயங்களில் முன்கூட்டியே பதிவும் செய்யப் பட்டிருந்தது. மண்டபங்களிலும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்த நிலையில் முழுஊரடங்கு காரணமாக பல திருமணங்களை மறுநாளன்று (திங்கள்கிழமை) மாற்றிவைத்திருக்கிறார்கள். திருமண தேதி மாற்றம் குறித்து வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூகவலைதளங்கள் மூலம் தெரிவித்தும் வருகிறார்கள்.
200 பேருக்கு அபராதம்
சொந்த ஊர் பயணம்
ரயில் போக்குவரத்து நிறுத்தப்படலாம் என்று கருதி திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகிறார்கள்.டெல்லியை சேர்ந்த 200-க்கும்மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று முன்தினம் இரவில் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரயிலில் திருநெல்வேலியிலிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
தடுப்பூசி முகாம் இடமாற்றம்
திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடுவதற்காக 54 சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரதான கட்டித்தில் தரைதளத்தில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் தடுப்பூசி முகாம் செயல்பட்டு வந்தது.இங்கு தடுப்பூசி போட வருவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதை யடுத்துதடுப்பூசி சிறப்பு முகாம் அருகேயுள்ள வளர்ச்சிமன்ற கூட்ட அரங்குக்கு மாற்றப்பட்டது. அங்கு நேற்றுமுதல் தடுப்பூசி முகாம் நடை பெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT