Published : 01 Apr 2021 03:16 AM
Last Updated : 01 Apr 2021 03:16 AM

சிவகங்கையில் கனிமொழியின் பிரச்சார வாகனத்தில் திடீர் சோதனை :

சிவகங்கை: சிவகங்கையில் திமுக மாநில மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்பியின் பிரச்சார வாகனத்தை போலீஸார் சோதனையிட்டனர்.

சிவகங்கை மாவட்டத்தில் திமுக வேட்பாளர்கள் கே.ஆர்.பெரியகருப்பன் (திருப்பத்தூர்), தமிழரசி (மானாமதுரை), இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் குணசேகரன் (சிவகங்கை), காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி (காரைக்குடி) ஆகியோரை ஆதரித்து கனிமொழி எம்.பி. நேற்று பிரச்சாரம் செய்தார்.

அவர் மானாமதுரையில் பிரச்சாரத்தை முடித்துவிட்டு சிவகங்கைக்கு வந்தார். சிவகங்கையில் மதுரை சாலையில் உள்ள சோதனைச் சாவடியில் கனிமொழியின் பிரச்சார வாகனம் வந்தபோது போலீஸார் மற்றும் துணை ராணுவத்தினர் மறித்தனர். பிறகு பணம் இருக்கிறதா என வாகனத்தில் சோதனையிட்டனர். ஆனால் பணம் எதுவும் சிக்கவில்லை. இதையடுத்து வாகனத்தைத் தொடர்ந்து செல்ல அனுமதித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x