Published : 09 Nov 2020 03:12 AM
Last Updated : 09 Nov 2020 03:12 AM
உசிலம்பட்டி அருகே தனியார் பேருந்து மோதி உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ.யின் உடல் போலீஸ் மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
மதுரை மாவட்டம், சேடபட்டி அருகிலுள்ள நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் வீரணன்(55). 1986-ல் காவலராகப் பணியில் சேர்ந்த இவர், பதவி உயர்வு பெற்று உசிலம்பட்டி தாலுகா காவல் நிலையத்தில் சிறப்பு எஸ்.ஐ.யாக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் இரவு ஆண்டிபட்டி கணவாய் பகுதியிலுள்ள சோதனைச்சாவடியில் அவர் பணியில் இருந்தார்.
பணி முடிந்து நேற்று காலை தேனி-உசிலம்பட்டி மெயின்ரோட்டில் பைக்கில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். குஞ்சாம்பட்டி அருகே சென்றபோது, பின்னால் வந்த தனியார் பேருந்து வீரணன் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த வீரணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.உசிலம்பட்டி நகர் போலீஸார் வழக் குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்துக்கு காரணமான பேருந்து ஓட்டுநர் வருசநாட்டைச் சேர்ந்த ஜீவா னந்தம்(35) என் பவரை கைது செய் தனர். இதனிடையே உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு வீரணனின் உடல், அவரது குடும்பத்தினரிடம் ஒப் படைக்கப்பட்டது. பின்னர், அவரது சொந்த ஊரான நரசிங்கபுரத்தில் போலீஸ் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிகழ்வில் மதுரை காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT