Published : 23 Dec 2013 04:53 PM
Last Updated : 23 Dec 2013 04:53 PM
பட்டுபோன மரங்கள் தான் மீண்டும் துளிர்க்கும். அதுபோல தே.மு.தி.க. மீண்டும் துளிர் விடப் போகிறது என்று அக்கட்சியின் தலைவர் விஜய காந்த் கூறினார்.
தே.மு.தி.க சார்பில் கோயம் பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா திங்கள்கிழமையில் கொண்டா டப்பட்டது.
இதில், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு கிறிஸ்துமஸ் கேக்குகளும், பிரியாணியும் வழங்கி னார். பின்னர், அவர் பேசியதாவது:
தே.மு.தி.க. ஒன்றுதான் மத பேதமற்ற முறையில் இந்து, கிறிஸ்தவர், முஸ்லிம் என 3 மத பண்டிகைகளையும் கொண்டாடு கிறோம். நான் அனைத்து மதங்களையும் நேசிக்கிறேன்.
தே.மு.தி.க.வில் மரங்கள் பட்டுபோய் விட்டதாக மற்றவர்கள் குறை சொல்கிறார்கள். பட்டுபோன மரங்கள் தான் மீண்டும் துளிர்க்கும். அதுபோல தான் தே.மு.தி.க. மீண்டும் துளிர் விடப் போகிறது. கட்சியில் இருந்து போனவர்களை பற்றி நான் கவலைப்படவில்லை.
இங்கு பேசிய பேராயர் எஸ்ரா சற்குணம் நீங்கள் கேப்டனாக இருக்கிறீர்கள். உங்களுக்கு இன்னொரு கேப்டன் தேவைப்படுகிறது. ஒரு விமானத்தில் 2 கேப்டன்கள் இருப்பார்கள். ஒரு கேப்டனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டால் இன்னொரு கேப்டன் தான் காப்பாற்றுவார். எனவே இன்னொரு கேப்டனை சேர்த்து கொள்வது தவறு இல்லை என்றார். அதனால் நான் அவரது கருத்தை பரிசீலித்து முடிவெடுப்பேன்.
தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லை என முதல்வர் ஜெயலலிதா கூறி வருகிறார். ஆனால் தாம்பரம் தாண்டி விட்டால் 10 மணி நேரம் மின்வெட்டு நிலவுகிறது. நாளைய பாரத பிரதமர் என்றும் ‘கட்அவுட்’ வைக்கின்றனர். அவர்களை மக்கள் ‘கெட் அவுட்’ சொல்ல போகிறார்கள்.
ஏற்காடு தேர்தலில் வெற்றி பெற்றதை பெருமையாக சொல்லு கிறார்கள். ஆனால் பெண்ணாகரம் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்தது நினைவில்லையா? டெல்லியில் நாங்கள் டெபாசிட் இழந்தது சொல்கிறார்கள்? அவர்கள் கர்நாடகாவில் டெபாசிட் இழந்தது தெரியவில்லை.
கூடுதல் விலை கேட்டு கரும்பு விவசாயிகள் போராட்டம் நடத்தி னார்கள். அவர்களுக்கு அதிகமாக வழங்க அரசு ஏன் முன்வரவில்லை. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டது.
காவல்துறை ஆளும் கட்சியி னருக்கு ஆதரவாக செயல்படுகிறது. காவல்துறை நேர்மையாக செயல்பட வேண்டும். பாரதிய ஜனதா கூட்டணிக்கு செல்ல வேண்டாம் என எஸ்றா சற்குணம் கேட்டுக் கொண்டார். அதை நான் கண்டிப்பாக பரிசீலிப்பேன். இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.
இந்த விழாவில் பேராயர்கள் எஸ்றா சற்குணம், ராஜாசிங், ஜெ.ஜான், கட்சி கொறடா சந்திர குமார், மற்றும் வி.என். ராஜன், செந்தாமரை கண்ணன், வி.யுவராஜ், ஏ.எம்.காமராஜ் உள்ளிட்ட மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT