Published : 16 Dec 2013 12:24 PM
Last Updated : 16 Dec 2013 12:24 PM
காங்கிரஸ் உடனான கூட்டணி விஷயத்தில், திமுக தலைவர் கருணாநிதியின் நிலைப்பாடு எந்த நேரத்திலும் மாறலாம் என்று தமிழக பாஜகவின் மூத்த தலைவர் இல.கணேசன் கருத்து தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை துரோகம் செய்த காங்கிரசுடன் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த வகையிலும் திமுக கூட்டணி சேராது என்று கட்சியின் பொதுக்குழுவில் பேசிய கருணாநிதி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், காங்கிரஸ் - திமுக இடையிலான பூசல் காரணமாகவே, உறவு முறிந்துவிட்டதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளது, காங்கிரஸ் கட்சிக்கு அவர் மறைமுகமாக விடுத்துள்ள அச்சுறுத்தலாகவே தாம் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
எந்த நேரத்திலும் காங்கிரஸ் குறித்த விஷயத்தில் திமுக தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் என்று கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT