Published : 25 Feb 2025 05:35 AM
Last Updated : 25 Feb 2025 05:35 AM
சென்னை: சென்னை ஐ.சி.எப். ஆலையில், தெற்கு ரயில்வேக்கான முதல் ஏசி மின்சார ரயில் பிப்ரவரி முதல் வாரத்தில் தயாரானது. 12 பெட்டிகள் கொண்ட இந்த ஏசி மின்சார ரயில், சென்னை ரயில் கோட்டத்தில் அண்மையில் ஒப்படைக்கப்பட்டது. இந்த ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்தம் 4,914 பேர் பயணிக்க முடியும்.
அதிகபட்சமாக மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும் திறன் கொண்டது. தானியங்கி கதவுகள், ஜி.பி.எஸ். அடிப்படையிலான தகவல் வசதி மற்றும் அறிவிப்பு வசதிகள் உள்ளன. அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமராக்கள் இருக்கும். இந்த ரயில் தாம்பரம் யார்டில் நிறுத்தப்பட்டு, சோதனை செய்யப்படுகிறது.
இந்நிலையில், சென்னை கடற்கரை - தாம்பரம் தடத்தில் உள்ள விரைவு பாதையில், ஏசி மின்சார ரயில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை நடத்தப்பட்டது. தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் பயணம் செய்து, பல்வேறு கட்ட ஆய்வுகளை மேற்கொண்டனர். சோதனை ஓட்டம் திருப்தியாக இருந்ததாகவும் ரயில் சேவை விரைவில் தொடங்கும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT