Published : 25 Feb 2025 05:30 AM
Last Updated : 25 Feb 2025 05:30 AM
சென்னை: ரயில்வே பொறியியல் பணி காரணமாக, தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் உட்பட 9 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. விழுப்புரம் யார்டில் பொறியியல் பணி காரணமாக, விரைவு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.
காக்கிநாடா துறைமுகம் - புதுச்சேரிக்கு பிப்.27-ம் தேதி மதியம் 2.30 மணிக்கு இயக்கப்படும் சர்கார் விரைவு ரயில் (17655), செங்கல்பட்டு - புதுச்சேரி இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது.
தாம்பரம் - விழுப்புரத்துக்கு பிப்.28-ம் தேதி காலை 9.45 மணிக்கு புறப்படும் மெமு ரயில் (66045), முண்டியம்பாக்கம் - விழுப்புரம் இடையே பகுதி ரத்து செய்யப்பட உள்ளது. மொத்தம் 9 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT