Published : 22 Nov 2023 04:00 AM
Last Updated : 22 Nov 2023 04:00 AM

மத்திய அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அரசியல் கூடாது: மத்திய இணை அமைச்சர் வலியுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் ஒரு பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கிய மத்திய இணை அமைச்சர் பகவந்த் குபா.

திருவண்ணாமலை: நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற விழா திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டில் நேற்று நடைபெற்றது.

ரசாயனம், உரம் மற்றும் புதுப்பிக்கவல்ல எரி சக்தி துறை மத்திய இணை அமைச்சர் பகவந்த் குபா தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். மேலும் அவர், “வேளாண்மை அறிவியல் மையம் மூலம் 5 பேருக்கு காய்கறி தொகுப்பு, 5 பேருக்கு சமையல் எரிவாயு இணைப்பு, தண்டராம்பட்டு உழவர் பணி கூட்டுறவு சங்கம் மூலம் 5 பேருக்கு கடன் அட்டை, மகளிர் குழுவுக்கு ரூ.52 லட்சத்தில் கடன் அனுமதி சீட்டு” உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசும் போது, “மத்திய அரசு வழங்கக் கூடிய நலத் திட்டங்களை தமிழக அரசு மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும், இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசியல் செய்யக் கூடாது. மத்திய அரசாங்கம் வழங் கக்கூடிய திட்டங்களை ஊடகங்கள் மூலமாக பொதுமக்களுக்கு அரசு அதிகாரிகள் தெரியப் படுத்த வேண்டும். மத்திய அரசு வழங்கும் அனைத்து நலத் திட்டங்களும் பொது மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x