Published : 22 Oct 2025 06:26 PM
Last Updated : 22 Oct 2025 06:26 PM
மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ), ராகு - சப்தம ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன் என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நன்மை தரும். எதைப் பேசினாலும் வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பது நன்மை தரும். ராஜாங்க ரீதியிலான காரியங்கள் கை கொடுக்கும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில் வியாபாரம் மெத்தனமாக இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் புறம் கூறாமல் இருப்பது நன்மை தரும். உங்களுடைய பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கு இடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பில்லாமல் போகலாம்.
பெண்களுக்கு பண வரத்து திருப்தி தரும். கலைத் துறையினருக்கு முயற்சிகளின் பேரில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியலில் உள்ளவர்கள் வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய அதிக கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் நிம்மதியும், சுகமும் அதிகமாகும். புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி வரலாம். பண வரத்து திருப்திகரமாக இருக்கும். பல வகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்தி சாதூர்யம் அதிகரிக்கும். யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
திருவோணம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். உறவினர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. எல்லாவிதமான காரியங்களும் சாதகமான பலன் தரும். பண வரத்து திருப்தி தரும். பக்தியில் நாட்டம் ஏற்படும். பண வரத்து அதிகரிக்கும்.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் எதிர்ப்புகள் அகலும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும். உதவிகளை செய்து மன திருப்தி அடைவீர்கள். கொடுத்த வாக்கை காப்பாற்ற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி திருப்தி நிலவும். பண வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும்.
பரிகாரம்: ஆதி பரா சக்திக்கு வேப்பிலை மாலை அணிவித்து தீபம் ஏற்றி வணங்க போட்டிகள் விலகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.
கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி (வ), ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன் என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் மனதில் உற்சாகம் பிறக்கும். தடைபட்ட காரியங்களில் தடை நீங்கி சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் தயக்கம் காட்டமாட்டீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்ட காரியங்கள் வேகம் எடுக்கும். கண் மூடித்தனமாக எதிலும் ஈடுபடாமல் யோசித்து செய்வது நல்லது. தொழில் வியாபாரம் தொய்வு நீங்கி சூடுபிடிக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதையும் குழப்பத்துடனேயே செய்ய நேரிடும். சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே அன்பு அதிகரிக்கும். சகோதரர்களிடம் கருத்து வேற்றுமை உண்டாகலாம். பெண்கள் எதிலும் தயக்கம் காட்டாமல் துணிச்சலாக காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகந்த காலகட்டம் இது. அரசியல்வாதிகள், சமூக சேவகர்களுக்கு பலன்கள் நன்மை தீமை என கலந்து கிடைத்தாலும் சிறப்பாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்க பாடுபட்டு படிப்பீர்கள்.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பயணங்கள் செல்ல நேரிடலாம். வாக்கு வன்மையால் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பணியாட்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். சரக்குகளை பாதுகாப்பாக வைப்பது நல்லது.
சதயம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பு அதிகரிக்கும். எந்திரங்களை இயக்குபவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். கணவன், மனைவிக்கு இடையே இருந்த மன வருத்தம் நீங்கும்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் குழந்தைகள் உங்கள் சொல் படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சி தரும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும்.
பரிகாரம்: நடராஜர் பெருமானை வணங்கி வர எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், செவ்வாய், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ), ராகு என கிரக நிலைகள் உள்ளன.
பலன்கள்: இந்த வாரம் வீண் பிரச்சனையால் மனக் குழப்பம் ஏற்படலாம். பயணங்களில் தடங்கல் ஏற்படலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடைகள் ஏற்படலாம். வழக்குகள் சம்பந்தமான விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வேகம் இருக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்படும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளிடம் இருந்து வந்த மனக் கசப்பு மாறும். குடும்பத்தில் நிம்மதி அதிகரிக்கும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த மனக்கவலைகள் மறைந்து ஒற்றுமை ஓங்கும். பெண்களுக்கு பயணங்களில் எதிர்பாராத தடங்கல் உண்டாகலாம்.
கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். அரசியல்துறையினருக்கு எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில் தடை ஏற்படலாம். கவனமாக படிப்பது நல்லது.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் எதிர்பார்த்த லாபம் வரும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாக்கு வன்மையால் காரிய வெற்றி பெறுவார்கள். குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்படலாம்.
உத்திரட்டாதி: இந்த வாரம் நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பண வரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முயல்வீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். தொழில் விரிவாக்கம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.
ரேவதி: இந்த வாரம் நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய வேலைகள் திருப்திகரமாக நடந்து முடியும். சுப காரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண காரியங்கள் கைக்கூடும். கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சி நிலவும்.
பரிகாரம்: பைரவருக்கு அர்ச்சனை செய்து வணங்க மன கஷ்டம் நீங்கும். எல்லா நன்மைகளும் உண்டாகும்.
இந்த வார கிரகங்களின் நிலை:

| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT