Published : 01 Nov 2025 06:25 AM
Last Updated : 01 Nov 2025 06:25 AM
மேஷம்: குடும்பத்தில் விட்டு கொடுத்துப் போவது நல்லது. அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
ரிஷபம்: பழைய பிரச்சினை தொடரும். இருப்பினும் மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. உயர் அதிகாரிகளின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
மிதுனம்: குடும்பஉறுப்பினர்களின் விருப்பங்களை கேட்டறிந்து நிறை வேற்றுவீர். செலவுகளைக் குறைத்து சேமிப்பீர்கள். பிள்ளைகளின் சாதனைகளால் பெருமை அடைவீர். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் வேற்றுமொழி வாடிக்கையாளர்களால் ஆதாயம் உண்டு.
கடகம்: பிள்ளைகளின் படிப்பு தொடர்பாக அலைச்சல், காரியத் தடை வரும். அரசு காரியங்கள் நிறைவுபெறும். பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். அலுவலகரீதியான வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். ஓரளவு லாபம் உண்டு.
சிம்மம்: மனைவி, பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார ரீதியாக அவசரமுடிவுகளைதவிர்க்கவும்.பங்குதாரர்களைபகைத்துக்கொள் ளாதீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம்.
கன்னி: உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும். பூர்வீக வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்த முயற்சிப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் நம்பிக்கையைப் பெற்று வீண்பழியில் இருந்து விடுபடுவீர்.
துலாம்: பணவரவு உண்டு. பழைய கடன்களை பைசல் செய்வீர். தந்தை வழி உறவினர்களுடன் இருந்த கருத்து மோதல் விலகும். வியாபாரம் விறுவிறுப்பாக அமைந்து லாபம் பார்க்கலாம். பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகரீதியான பயணங்களால் ஆதாயம் உண்டு.
விருச்சிகம்: தெளிவான முடிவுகளால் தொல்லை நீங்கும். எதிர்பாராத சமயத்தில் எதிர்பாராதவர்களிடம் இருந்து உதவிகள் கிட்டும். இழுபறியாக இருந்த பூர்வீக சொத்து வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலக பணிகளை விரைந்து முடிப்பீர்.
தனுசு: பிள்ளைகள்பொறுப்புஉணர்ந்துசெயல்படுவர். குடும்பஉறுப்பினர் களுடன் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்வீர். வியாபாரத் தில் வராது என்று இருந்த பணம் வந்து சேரும். பணியாளர்களின் ஆதரவை பெறுவீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
மகரம்: வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை உயரும். தாய்வழி சொத்துகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசு காரியம் முடியும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகள் ஆதரவு தருவார்கள்.
கும்பம்: மனதில் தெளிவு பிறக்கும். நீண்ட நாளாக சந்திக்க நினைத்த நண்பரை சந்திப்பீர்கள். அரசு அதிகாரிகளின் நட்பு கிட்டும். வியாபாரம் சிறக்கும். கடையை மக்கள் அதிகம் கூடும் இடத்துக்கு மாற்றுவீர். அலு வலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். பொறுப்பு கூடும்.
மீனம்: குடும்ப உறுப்பினர்களுடன் விவாதம் செய்ய வேண்டாம். முக்கிய பிரமுகர்கள், பிரபலங்களின் நட்பு கிட்டும். அரசு காரியங்கள் எளிதில் முடியும். அலுவலக ரீதியான பிரச்சினைகளில் விடுபடுவீர். பங்குதாரர்களின் ஆதரவுடன் வியாபாரப் போட்டியை சமாளிப்பீர்கள்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT