Published : 30 Oct 2025 06:22 AM
Last Updated : 30 Oct 2025 06:22 AM
மேஷம்: புது நண்பர்கள் அறிமுகமாவர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். வாகனப் பழுது நீங்கும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
ரிஷபம்: குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். பிள்ளைகள் வருங்காலத்துக்கான முக்கிய முடிவுகளை எடுப்பீர். தம்பதிக்குள் இருந்த கருத்துமோதல் விலகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். உத்தியோகம் சிறக்கும்.
மிதுனம்: பழைய பொன், பொருளை மாற்றிவிட்டு புதியன வாங்குவீர்.மனைவிவழியில் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வராது என்றிருந்த பணம் வந்து சேரும். சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
கடகம்: திட்டமிட்ட வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களுடன் மனஸ்தாபம் வரும். வாகனத்தை மாற்றுவீர். வியாபாரம் சிறக்கும். பங்குதாரர்களின் ஆலோசனையை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
சிம்மம்: பிரபலங்களை சந்திப்பதால் உங்கள் வாழ்வில் சில மாற்றங்கள் வரலாம். ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். வியாபாரத்தில் பணியாட்கள் அனுசரணையாக நடப்பார்கள். கடையை புது இடத்துக்கு மாற்றுவீர்கள். அலுவலகத்தில் யாரையும் உதாசீனப்படுத்த வேண்டாம்.
கன்னி: இழுபறியாக இருந்த பணிகள் நிறைவடையும். தந்தையாருடன் இருந்த பனிப்போர் விலகும். அக்கம் பக்கத்தினரின் அன்பு தொல்லை நீங்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்களை மேற்கொள்ள வேண்டிவரும்.
துலாம்: குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும். மாணவர்களின் கவனம் படிப்பில் திரும்பும். தந்தைவழியில் நிம்மதியுண்டு. வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
விருச்சிகம்: உற்றார் - உறவினர்கள் உங்கள் வீடு தேடி வந்து பேசுவார்கள். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
தனுசு: பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வீடு வந்து சேரும். மகளின் திருமணம் நிச்சயமாகும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் ஏற்படும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாண்டு பழைய வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.
மகரம்: உறவினர், நண்பர்களுடன் விவாதங்கள் வரும். பழைய வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வர வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் புதிய முதலீடுகள் வேண்டாம். உத்தியோகத்தில் டென்ஷன் வரக்கூடும். தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
கும்பம்: இங்கிதமாகப் பேசி சுற்றியிருப்பவர்களை அசத்துவீர். முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் உண்டு. மனைவி, பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். பூர்வீக வீட்டை சீரமைப்பீர். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர்.
மீனம்: கூடுதலான பணவரவால் வீட்டிலுள்ள பழைய பொருட்களை மாற்றுவீர். வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். அலுவலகத்தில் யாரைப் பற்றியும் தலைமையிடத்தில் புகார் கூறிக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT