Published : 29 Oct 2025 06:29 AM
Last Updated : 29 Oct 2025 06:29 AM
மேஷம்: வியாபாரரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்களுடன் உறவாடிக் கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். பங்கு வர்த்தகம் லாபம் தரும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
ரிஷபம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சுபகாரியம் இப்போது கூடி வரும். பிள்ளைகளின் எண்ணங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்வீர்கள். சகோதர, சகோதரிகள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவீர்கள்.
மிதுனம்: நெடுநாளாகத் திட்டமிட்டக் காரியங்களை செயல்படுத்திக் காட்டுவீர்கள். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உயரதிகாரியின் ஆதரவு கிட்டும். அடிக்கடி செலவு வைத்த வாகனத்தை மாற்றி புது வாகனம் வாங்குவீர்கள்.
கடகம்: வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். கணவன் - மனைவிக்குள் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. சிலருக்கு நல்லது சொல்லப் போய் அது தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்தக் கூடும். ஆன்மிகத் தில் நாட்டம் ஏற்படும். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
சிம்மம்: கணவன் - மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும். பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருதி சில முடிவுகள் எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். அலுவலகத்தில் வேலைப்பளுஇருந்துகொண்டே இருக்கும். பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
கன்னி: வீட்டுக்குத் தேவையான நவீன மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் நீங்கி மனநிம்மதி கிட்டும். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். மனைவிவழி உறவினர் உங்கள் உதவியை நாடுவார்.
துலாம்: நீங்கள் எடுக்கும் தைரியமான முடிவுகள் குடும்பத்தினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பால்ய நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.
விருச்சிகம்: உங்களின் குறிக்கோளை எட்டிப்பிடிக்க முயற்சிப்பீர்கள். எதிர்பாராத வகையில் பணவரவு உண்டு. விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும். தந்தையின் உடல்நிலை சீராகும். அக்கம்பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். வெளியூர் பயணம் உண்டு.
தனுசு: எதற்கெடுத்தாலும் அடுத்தவர்களை குறைகூறுவதை நிறுத்துங்கள். மற்றவர்களுக்கு நியாயம் பேசப்போய் சிக்கலில் மாட்டிக் கொள்ளாதீர்கள். பண விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது. குடும்பத்தில் சின்னச்சின்ன பிரச்சினைகள் தலைதூக்கும்.
மகரம்: மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வெளியூரிலிருந்து உறவினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. வீண் செலவுகள் குறையும். குடும்பத்தினரின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். தாயார் ஆதரவாக இருப்பார். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
கும்பம்: சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். தந்தைவழி உறவினர்களால் சில காரியங்கள் நிறைவேறும். வீடு, வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். ஆன்மிகவாதிகளுடன் சந்திப்பு நிகழும். வேலை தேடுவோருக்கு நல்ல தகவல் வரும்.
மீனம்: பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். சகோதரர் வகையில் ஒற்றுமை பிறக்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை குடும்பத்துடன் சென்று நிறைவேற்றுவீர்கள்.
|
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT