Published : 28 Oct 2025 06:31 AM
Last Updated : 28 Oct 2025 06:31 AM
மேஷம்: கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். அலுவலகத்தில் குழப்பம் நீங்கி நிம்மதி பிறக்கும். மேலதிகாரிகள் உதவிகரமாக நடந்து கொள்வர். வியாபாரம் சிறக்கும்.
ரிஷபம்: மனதில் பட்டதை பளிச்சென்று பேசுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உறவினர், நண்பர்களால் மனநிம்மதி கிட்டும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவர். உத்தியோக ரீதியாக பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.
மிதுனம்: செலவுகள் கையை கடிக்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்ளவும். அக்கம் பக்கத்தினரை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். கடையை வேறு இடத்துக்கு மாற்ற முயற்சிப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும்.
கடகம்: குழப்பங்கள் நீங்கி மனதுக்கு இனிய சம்பவங்கள் நடக்கும். பணவரவு திருப்தி தரும். சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாமல் தடுமாறுவீர்கள். உடல்நலத்தில் அக்கறை செலுத்தவும். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது. வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்.
சிம்மம்: பழைய சுகமான நினைவுகள் மகிழ்ச்சி தரும். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்தி சேமிக்க எண்ணுவீர்கள். குழப்பம் நீங்கி மனநிம்மதி பிறக்கும். வெளிவட்டாரத்தில் உங்களிடம் பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பர். வியாபாரம், உத்தியோகம் சிறக்கும்.
கன்னி: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத் திறன் கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தில் வராது என்றிருந்த பணம் வந்து சேரும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
துலாம்: துடிப்புடன் காணப்படுவீர். தம்பதிக்குள் மகிழ்ச்சியுண்டு. விருந்தினர், நண்பர்கள் வருகையால் வீடு களைகட்டும். அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். மேலதிகாரிகள் உதவிகரமாக இருப்பர். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். பங்குதாரர்கள் ஆதரிப்பர்.
விருச்சிகம்: திட்டமிட்ட காரியங்களை தாமதிக்காமல் செய்து முடிப்பீர். பிள்ளைகளை பொறுப்பாக வளர்க்க வேண்டும் என எண்ணுவீர். தாயார், மனைவியின் உடல் ஆரோக்கியம் திருப்தி தரும். வியாபாரம் சூடு பிடித்து லாபமுண்டு. அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.
தனுசு: அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். அவசரப்படாமல் எதிலும் நிதானமாக செயல்படவும். குடும்பத்தில் நிம்மதியுண்டு. யோகா, ஆன்மிகத்தில் ஈடுபாடு கூடும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும். வியாபாரம் சிறக்கும்.
மகரம்: பழைய நண்பரக்ள் தேடி வருவர். குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயல்வீர். விவாதம் தவிர்க்கவும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.
கும்பம்: உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். சகோதர வகையில் நன்மை பிறக்கும். உற்சாகமான பேச்சால் அனைவரையும் கவருவீர். வீடு, வாகனத்தில் பழுதை மாற்றுவீர். முன்கோபம் வரும். வியாபாரம், உத்தியோகத்தில் அதிசயத்தக்க முன்னேற்றம் காண்பீர்.
மீனம்: குடும்ப உறுப்பினர்களுடன் வெளியில் சென்று வருவீர். தாயாரின் உடல்நிலை சீராக அமையும். உறவினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரம் சூடு பிடிக்கும். புதிய பங்குதாரர்களின் ஆலோசனையை கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
|
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT