Published : 27 Oct 2025 06:42 AM
Last Updated : 27 Oct 2025 06:42 AM
மேஷம்: கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர். தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். தாயாரின் உடல்நலம் சீராகும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த உதவி கிடைக்கும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்.
ரிஷபம்: தவிர்க்க முடியாத செலவுகள் வந்து போகும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் மேலதிகாரி பாராட்டுவார்.
மிதுனம்: நீண்ட நாட்களுக்குப் பிறகு நண்பர்கள் தேடி வருவர். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். விஐபிகளால் பாராட்டப்படுவீர். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் உண்டு. அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்புண்டு.
கடகம்: குடும்பத்தில் நிலவிய விவாதங்கள் மறையும். பிள்ளைகளால் பெருமையடைவீர். நல்லவர்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். எதிர்பார்த்த லாபம் உண்டு. அலுவலகத்தில் உயரதிகாரிகள் ஆதரிப்பர்.
சிம்மம்: மனதளவில் இருந்துவந்த பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவீர். புது ஆபரணம், ஆடைகள் சேரும். வியாபாரத்தில் இழுபறியாக இருந்த பாக்கிகளை போராடி வசூலிப்பீர். பணியாட்கள் ஆதரவாக இருப்பர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
கன்னி: உங்களின் ஆளுமை திறனால் எதிலும் வெற்றி பெறுவீர். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பூர்வீக சொத்து சம்பந்தமாக ஊர் பெரியவர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
துலாம்: பிள்ளைகளால் பெருமையடைவீர். மனைவி வழியில் உங்கள் தேவையறிந்து உதவுவர். பழுதான வாகனத்தை மாற்றுவீர். சொத்து வழக்குகள் சாதகமாக அமையும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர். அலுவலக பணியாளர்களின் சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.
விருச்சிகம்: வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. தந்தைவழி உறவினர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பதால் நன்மை உண்டு.
தனுசு: அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். இரண்டு - மூன்று முயற்சிகளுக்குப் பிறகு சில காரியங்கள் முடியும். குடும்பத்தினரை அனுசரித்து போவது நல்லது. செலவுகள் வரக்கூடும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர்.
மகரம்: எதார்த்தமான பேச்சால் தடைபட்ட காரியங்களை முடிப்பீர். பிள்ளைகளின் உடல்நலம் சீராகும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் பணியாட்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் யாரிடமும் விவாதம் செய்ய வேண்டாம்.
கும்பம்: பழைய நண்பர்கள், உறவினர்களை சந்திப்பீர். மனைவிவழியில் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். வாகனத்தை சீர் செய்வீர். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் பெறுவீர்கள்.
மீனம்: சொந்தம் பந்தங்களிடையே மதிப்பு, மரியாதை கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரக்கூடும். மூத்த சகோதர சகோதரிகள் பண உதவி செய்வர். வாகனத்தை மாற்றுவீர். உத்தியோகம் சிறக்கும். வியாபாரத்தில் யாருக்கும் எந்த உறுதிமொழியும் கொடுக்க வேண்டாம்.
|
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT