Published : 26 Oct 2025 06:52 AM
Last Updated : 26 Oct 2025 06:52 AM

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 26 அக்டோபர் 2025

மேஷம் : எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். புதிய யுக்திகளை வியாபாரத்தில் கையாண்டு அனைவரையும் கவருவீர்.

ரிஷபம் : திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் வரக்கூடும். குடும்பத்தினர் அனுசரணையாக இருப்பர். வியாபாரத்தில் பணியாட்களிடம் கடுமையாக நடந்து கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்பு உயரும். மேலதிகாரி பாராட்டுவார்.

மிதுனம் : பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். பிள்ளைகள் மனம் விட்டுப் பேசுவர். பண விஷயத்தில் கறாராக இருப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு சாதிப்பீர்.

கடகம் : வீட்டிலுள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பழைய வழக்குகளை பேசித் தீர்ப்பீர்கள். பணவரவால் நிம்மதியுண்டு. கடன்களை பைசல் செய்வீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

சிம்மம் : வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் வரும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். வாகனத்தை மாற்றுவீர்கள். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். வியாபாரம் சிறக்கும்.

கன்னி : தொட்டது துலங்கும். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். அனுபவப்பூர்வமாக பேசுவீர்கள். பழைய கடனை பைசல் செய்ய புது வழி பிறக்கும். சகோதர சகோதரிகள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பார்கள். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.

துலாம் : தடைபட்டுக் கொண்டிருந்த பணிகள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர்கள். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம் : மனக் குழப்பத்தை நீக்க முயற்சிக்கவும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும். வியாபாரத்தில் பழைய பாக்கிகளை வசூலிப்பதில் கவனமாக இருக்கவும்.

தனுசு : எதிலும் முன்யோசனையுடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தை தவிர்க்கவும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். அலுவலகத்தில் பணியாட்களிடம் கோபத்தை காட்டாதீர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்க்கலாம். பங்குதாரர்கள் ஆதரிப்பர்.

மகரம் : கடந்த கால சுகமான அனுபவங்களை நினைத்து மகிழ்வீர்கள். விவாதங்களை தவிர்ப்பீர். எதிலும் உங்கள் கை ஓங்கும். வியாபார ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை நிராகரிக்க வேண்டாம். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.

கும்பம் : பிள்ளைகளின் சாதனைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். நீண்டநாள் கனவுகள் நனவாகும். விலை உயர்ந்த நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரம் சிறக்கும்.

மீனம் : மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை நீங்கும். முக்கிய பிரமுகர்களின் ஆதரவுடன் வீடு கட்டும் பணிகள் நிறைவடையும். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x