Published : 25 Oct 2025 06:24 AM
Last Updated : 25 Oct 2025 06:24 AM
மேஷம்: நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலையை சமாளிக்க வேண்டி வரும். விவாதம் வேண்டாம். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக இருந்த டென்ஷன், அலைச்சல் விலகும். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும்.
ரிஷபம்: அறிஞர்கள், கல்வியாளர்களின் நட்பு கிட்டும். குடும்பத்தில் நிம்மதி தங்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பர். சிலருக்கு பெரிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனையைக் கேட்டு நடக்கவும். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர்.
மிதுனம்: தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர். சகோதர வகையில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் மதிப்புயரும்.
கடகம்: வெளியூரிலிருந்து உறவினர், நண்பர்களின் வருகையுண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். ஓரளவு லாபம் உண்டு. குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும்.
சிம்மம்: வீட்டில் மகிழ்ச்சி தங்கும். நட்பு வட்டாரம் விரியும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர். தாயாரின் உடல்நிலை சீராக அமையும். அலைச்சல், டென்ஷன் குறைந்து முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
கன்னி: தடைபட்ட காரியங்கள் சுமுகமாக முடியும். சொந்த பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். பிள்ளைகளால் நிம்மதியுண்டு. அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். உத்தியோகத்தில் ஏற்றமுண்டு. வியாபாரரீதியாக சில பிரபலங்களை சந்திக்க நேரும்.
துலாம்: திறமையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பூர்வீக சொத்து வழக்குகள் சாதகமாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
விருச்சிகம்: முன்கோபம் தவிர்ப்பீர். வழக்குகளில் வெற்றி பெற போராடுவீர். அடுத்தவர்கள் விவகாரத்தில் அநாவசியமாக மூக்கை நுழைக்காதீர். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும். வியாபாரம் சிறக்கும்.
தனுசு: குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி தங்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர். வியாபாரத்தில் போட்டிகள் இருந்தாலும் லாபமுண்டு. புதிய பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
மகரம்: இலக்கை நோக்கி முன்னேறுவீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். பிள்ளைகளால் பெருமையடைவீர். வீடு, நிலம் தொடர்பான வழக்கில் வெற்றி பெறுவீர்கள். அரசால் அனுகூலமுண்டு. வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்ப்பீர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
கும்பம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்கு பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தாயின் உடல் நலம் சீராகும். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவர். வியாபாரம் சிறக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும்.
மீனம்: சோர்வாக இருந்த நீங்கள் சுறுசுறுப்படைவீர்கள். சிந்தனைத் திறன் கூடும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். மனைவி, பிள்ளைகளின் உடல்நலம் சீராக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
|
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT