Published : 23 Oct 2025 06:25 AM
Last Updated : 23 Oct 2025 06:25 AM
மேஷம்: அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. திடீர் செலவு, டென்ஷன்வரும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் அவசியம். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர்.
ரிஷபம்: பேச்சில் கம்பீரம் பிறக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தாயாரின் மருத்துவச் செலவுகள் குறையும். பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், டென்ஷன் இருக்கும். வியாபாரம் சூடு பிடித்து லாபம் தரும். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.
மிதுனம்: இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தையாரின் உடல்நிலை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் சாதகமாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.
கடகம்: குடும்பத்தினரை கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களை புரிந்து கொள்வர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். அலுவலகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
சிம்மம்: எதிலும் மகிழ்ச்சி கிட்டும். வெளிப்படையான பேச்சால் காரியங்களை செயல்படுத்துவீர். தம்பதிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். பாக்கிகள் வசூலாகும்.
கன்னி: பணப் பிரச்சினையை சமாளிக்க வழி கிடைக்கும். குடும்பத்தினரால் மனநிம்மதி உண்டு. வியாபாரத்தில் முக்கியமானவர்கள் அறிமுகமாவர். எதிலும் கவனமாக செயல்படுவது நல்லது. அலுவலகரீதியான பயணங்களால் ஆதாயம் உண்டு. தலைமையிடத்தால் கவனிக்கப்படுவீர்.
துலாம்: செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர். தம்பதிக்குள்விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவர். வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு லாபம் பார்க்கலாம். அலுவலகரீதியாக பிரபலங்களை சந்திக்க வேண்டிய அவசியம் ஏற்படும்.
விருச்சிகம்: புதிய கோணத்தில் சிந்தித்து செயல்படுவீர். பழைய நண்பர்கள் தேடி வருவர். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர். வியாபாரத்தில் புது நபர்களின் வருகையுண்டு. பணியாளர்களை அன்பாக நடத்தவும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
தனுசு: உடன்பிறந்தவர்கள் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்பர். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவர். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வாகனத்தை சீர் செய்வீர். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
மகரம்: குடும்ப உறுப்பினர்களுடன் சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்பீர். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர். மகளுக்கு வரன் அமையும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிட்டும். வியாபாரம் சூடு பிடித்து திருப்தி தரும். அலுவலகத்தில் விவாதம் தவிர்ப்பீர்.
கும்பம்: மனநிறைவுடன் காணப்படுவீர். குடும்பத்தில் அனுசரித்துப் போவீர். பிள்ளைகளுடன் இருந்த கருத்து மோதல் விலகும். பழைய கடன்களை பைசல் செய்வீர். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரைக்கப்படுவீர். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது.
மீனம்: தடைபட்டிருந்த காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் நல்ல தீர்வு காண்பீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்.
|
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT