Published : 20 Oct 2025 06:21 AM
Last Updated : 20 Oct 2025 06:21 AM
மேஷம்: உணர்ச்சிப்பூர்வமாக பேசுவதைவிட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். இழுபறியாக உள்ள விஷயத்தில் முக்கிய முடிவு எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். உடல்நலம் சீராகும். தந்தை வழியில் அனுகூலம் உண்டு.
ரிஷபம்: மனக் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வெளியூரில் இருந்து உறவினர்கள், நண்பர்கள் வருகை உண்டு. குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். பண வரவு அதிகரிக்கும். பொருட்கள் சேரும்.
மிதுனம்: நண்பர்கள், உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். வயிற்றுவலி, கழுத்துவலி நீங்கும். தொழில், வியாபாரத்தில் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
கடகம்: நீங்கள் ஏற்கெனவே செய்த உதவிகளுக்கு இப்போது பாராட்டு கிடைக்கும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு, அந்தஸ்து உயரும். வேலைச் சுமை குறையும்.
சிம்மம்: பணப் பற்றாக்குறை விலகும். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பிள்ளைகளை நல்வழிப்படுத்துவீர்கள். மனநிறைவுடன் சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசக் கூடாது.
கன்னி: வேலைச்சுமை இருந்துகொண்டே இருக்கும். குடும்பத்தினர் ஆதரவாக இருப்பார்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. வாகன வகையில் செலவுகள் உண்டாகும். ஆன்மிகம், தியானம், யோகாவில் நாட்டம் அதிகரிக்கும்.
துலாம்: வீண், ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். மனதுக்குப் பிடித்தவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனைவியுடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். பல வகையிலும் பொருட்கள் சேரும்.
விருச்சிகம்: சாதுர்யமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். உற்சாகம், தோற்றப் பொலிவு அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு தேடிவரும். யாரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம்.
தனுசு: பேச்சில் தெளிவு பிறக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். பெற்றோரின் விருப்பத்தைக் கேட்டு செயல்படுவீர்கள். நாடி வந்தவர்களுக்கு இயன்ற உதவிகளை செய்வீர்கள். எடுத்த காரியத்தை முடிப்பீர்கள்.
மகரம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மரியாதை கூடும். புதிய பதவி, பொறுப்புகள் தேடி வரும். மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் பயணத்தால் குதூகலம் கூடும்.
கும்பம்: வெளி வட்டாரத்தில் அந்தஸ்து கூடும். தைரியமான முடிவுகளை எடுத்து வெற்றி காண்பீர்கள். உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். பழைய சொத்துப் பிரச்சினைகள் சுமுகமாகத் தீரும்.
மீனம்: வீண் சந்தேகத்தால் சங்கடங்கள், தேவையற்ற வாக்குவாதம் வந்துபோகும். கோபத்தை தவிர்க்கப் பாருங்கள். தொழில், வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க போராடுவீர்கள். ஆன்மிகம், யோகாவில் ஈடுபாடு உண்டாகும்.
|
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT