Published : 17 Oct 2025 06:19 AM
Last Updated : 17 Oct 2025 06:19 AM

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 17 அக்டோபர் 2025

மேஷம்: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வீடு கட்ட பிளான் அப்ரூவலாகி வரும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் இருந்து வந்த பிரச்சினைகளுக்கு நல்லவிதமாக தீர்வு கிட்டும்.

ரிஷபம்: பிள்ளைகள் படிப்பு தொடர்பாக அலைச்சல், இருக்கும். பிரபலங்களின் வீட்டு விசேஷங்களில் பங்கேற்பீர். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். கூட்டுத்தொழிலில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.

மிதுனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர். தம்பதிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாட்கள் அனுசரணையாக நடந்து கொள்வார்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். மேலதிகாரிகளின் ஆதரவைப் பெற போராடுவீர்கள்.

கடகம்: பழுதடைந்த மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர். பிரச்சினைகளை எதிர்கொண்டு சமாளிக்கும் மன வலிமை கூடும். தாய் வழி உறவினர்களால் நிம்மதி கிட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர். அலுவலகத்தில் அமைதி காப்பது நல்லது.

சிம்மம்: பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். அடிக்கடி தொல்லை தந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் சிக்கல்கள் வரக்கூடும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.

கன்னி: எதையும் சாதித்துவிடலாம் என்ற எண்ணம் வரும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். பிரபலங்களின் அறிமுகம் கிட்டும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு உண்டு. அலுவலகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டிவரும்.

துலாம்: எதிர்ப்புகளை தகர்த்தெறிவீர். பணவரவுண்டு. முக்கிய பிரமுகர்கள் அறிமுகமாவர். பிள்ளைகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர். வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். புதிய பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

விருச்சிகம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் சந்தோஷம் தங்கும். விருந்தினர் வருகை உண்டு. திட்டமிட்டபடி செயல்படுவீர். மாணவர்களின் கவனம் படிப்பில் திரும்பும். வங்கிக் கடனுதவி கிட்டும். தொழிலதிபர்கள் அறிமுகமாவர். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.

தனுசு: நெருக்கமானவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முற்படுவீர். விருந்தினர்களின் வருகையால் திடீர் செலவுகள் இருந்தாலும் மகிழ்ச்சி உண்டு. முன்கோபம் விலகும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். அலுவலகத்தில் சக ஊழியர்கள் மதிப்பர்.

மகரம்: தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் கிட்டும். பங்குதாரர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகம் சிறக்கும்.

கும்பம்: சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். புதிய யோசனைகள் பிறக்கும். பணவரவால் கடன்கள் தீரும். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வியாபாரத்தில் போட்டிகளை வெற்றிகரமாக சமாளிப்பீர். அலுவலகத்தில் புதிய பதவி கிடைக்கும்.

மீனம்: பணவரவு திருப்தி தரும். மனைவிவழியில் ஆதாயம் உண்டு. குலதெய்வம் கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர். தடைபட்ட பணிகள் முடிவுக்கு வரும். வியாபாரத்தில் எதிலும் கவனமாக இருக்கவும். அலுவலகத்தில் மேலதிகாரிக்கு ஆதரவாக இருப்பீர்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x