Published : 16 Oct 2025 06:12 AM
Last Updated : 16 Oct 2025 06:12 AM
மேஷம்: சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவர். வியாபாரம் லாபம் தரும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள்.
ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். ஆன்மிக நாட்டம் கூடும். உறவினர்களுடன் இருந்த மோதல்கள் விலகும். வியாபாரத்தில் தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலக ரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
மிதுனம்: பழைய சம்பவங்கள் மகிழ்ச்சி தரும். சொத்து வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். தந்தைவழியில் உதவி கிட்டும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் வரும். உத்தியோகம் சிறக்கும்.
கடகம்: தம்பதிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வாகனத்தில் கவனம் தேவை. விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர். அலுவலகத்தில் மதிப்புயரும்.
சிம்மம்: பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். முன்கோபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் போட்டிகள் இருக்கும். பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும். அலுவலக ரீதியான வெளியூர் பயணங்களால் அலைச்சல், ஆதாயம் உண்டு.
கன்னி: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். முன்கோபம் விலகும். மனைவியுடன் இருந்த மோதல்கள் நீங்கும். மாணவர்கள் உற்சாகமாககாணப்படுவர். வியாபாரம் சூடு பிடித்து லாபம் பார்ப்பீர். அலுவலகத்தில் உங்களின் ஆளுமைத் திறன் கூடும். மேலதிகாரிகள் பாராட்டுவர்.
துலாம்: முகப்பொலிவு கூடும். தம்பதிக்குள் இருந்த மனஸ்தாபம் நீங்கும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவி கிட்டும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
விருச்சிகம்: சின்ன சின்ன வாய்ப்புகளை பயன்படுத்தி, காரியம் சாரிப்பீர். பெற்றோரின் ஒத்துழைப்பு கூடும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அலுவலக ரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
தனுசு: தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தை கேட்டறிந்து நிறைவேற்றுவீர்கள். வியாபாரரீதியாக பிரபலங்களை சந்திப்பீர்கள். உங்களின் லாபம் மேலும் அதிகரிக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
மகரம்: இனந்தெரியாத சின்னச் சின்ன கவலைகள் வந்து போகும். உறவினர், நண்பர்களை பகைத்து கொள்ளாதீர். வாகனத்தை மாற்றுவீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
கும்பம்: அடிமனதில் இருந்த போராட்டம் நீங்கும். புதிய நண்பர்களின் அறிமுகத்தால் உற்சாகமடைவீர்கள். வாகனத்தால் வீண் செலவு இருக்காது. வியாபாரத்தில் போட்டிகள் குறையும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிட்டும். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
மீனம்: குடும்பத்தினரால் மனநிம்மதி கிட்டும். பழைய கடன்பிரச்சினை முடிவுக்கு வரும். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். புதியவர்களின் நட்பு கிட்டும். மக்கள் கூடும் இடத்துக்கு கடையை மாற்றுவீர். அலுவலகத்தில் இழுபறியான பணிகளை முடிப்பீர்கள்.
|
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT