Published : 15 Oct 2025 06:32 AM
Last Updated : 15 Oct 2025 06:32 AM
மேஷம்: அடுக்கடுக்காக இருந்துவந்த செலவுகள் இனி குறையும். சவாலான காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வியாபார ரீதியாக பிரபலங்களின் உதவியை நாடுவீர்கள். முன்கோபம், பதற்றம் நீங்கும். வீடு, வாகன பராமரிப்பை மேற்கொள்வீர்கள்.
ரிஷபம்: எதிரிகளை வீழ்த்தும் வல்லமை உண்டாகும். கறாராகப் பேசி காரியங்களை சாதிப்பீர்கள். சேமிக்கும் அளவுக்கு வருவாய் அதிகரிக்கும். அடிக்கடி செலவு வைத்த சாதனங்களை மாற்றிவிட்டு புதியது வாங்குவீர்கள். பிள்ளைகளால் பெருமை ஏற்படும்.
மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். எதிர்பார்த்த விலைக்கே பூர்வீகச் சொத்தை விற்பீர்கள். பெரிய மனிதர்கள், வெற்றி பெற்றவர்களின் நட்பு கிடைக்கும். அலுவலகத்தில் அனுகூலமான சூழல் காணப்படும். வெளியூர் பயணம் ஏற்படும்.
கடகம்: எதிர்பாராத செலவுகளால் சேமிப்புகள் கரையும். வீண் விவாதங்களை தவிர்த்துவிடுங்கள். பிள்ளைகளின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வியாபாரத்தில் போட்டி, பொறாமை அதிகரிக்கும். மூத்த சகோதரர் உங்கள் உதவியை நாடுவார்.
சிம்மம்: குடும்பத்தில் குதூகலம் காணப்படும். பிள்ளைகள் பொறுப்பு டன் நடந்து கொள்வார்கள். வாகனப் பராமரிப்பை மேற்கொள்வீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். நவீன மின்சாதனங்கள் வாங்குவீர்கள்.
கன்னி : பழைய நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள். சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். அலுவலகத்தில் மேலதிகாரிகள் நேசக்கரம் நீட்டுவார்கள். வெளியூர் செல்ல திட்டமிடுவீர்கள். வேலைக்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும்.
துலாம்: சொந்தபந்தங்களிடையே மதிப்பு, மரியாதை கூடும். தந்தைவழி சொத்துகள் கைக்கு வரக்கூடும். மூத்த சகோதர சகோதரிகள் பண உதவி செய்வார்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.
விருச்சிகம்: புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். வீடு, மனை வாங்குவது குறித்து குடும்பத்தினருடன் ஆலோசிப்பீர்கள்.
தனுசு: வெளிவட்டாரத்தில் கவனம் தேவை. பிறருக்கு ஜாமீன், உத்தரவாதம் தருவதை தவிர்த்து விடுங்கள். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படக்கூடும். எளிதில் முடியும் காரியங்கள் கூட இழுபறிக்குப் பின்னரே முடியும். வாகனச் செலவு திட்டமிட்டதை விட அதிகரிக்கும்.
மகரம்: சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். குடும்பத்துடன் ஆன்மிகப் பயணம் செல்ல திட்டமிடுவீர்கள். பால்ய நண்பரை சந்தித்து மகிழ்வீர்கள்.
கும்பம்: நீண்ட நாட்களாக எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். வீட்டில் பழுதான பொருட்களை மாற்றிவிட்டு புதிய பொருட்களால் அலங்கரிப்பீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.
மீனம்: புதியவர்கள் அறிமுகமாவார்கள். வரவேண்டிய பணமெல்லாம் கைக்கு வரும். வருங்காலத்துக்காக சேமிக்கத் தொடங்குவீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். தாயார் ஆதரவாக இருப்பார்.
|
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT