Published : 14 Oct 2025 06:26 AM
Last Updated : 14 Oct 2025 06:26 AM
மேஷம்: பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். வேற்றுமதத்தவர், வேற்று மொழி பேசுபவர்கள் உதவுவர். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். அலுவலகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசாங்க அதிகாரிகளை சந்திப்பீர். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். லாபம் பார்ப்பீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கவும்.
மிதுனம்: குழப்பங்கள் நீங்கி குடும்பத்தில் மனநிறைவு கிட்டும். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பழைய பிரச்சினைகளை தீர்ப்பீர்கள். மாணவர்களின் கனவு நினைவாகும். வியாபாரத்தில் லாபம் உண்டு. அலுவலகத்தில் விவாதம் தவிர்க்கவும்.
கடகம்: குடும்பத்தினரின் பேச்சுக்கு மதிப்பளிக்கவும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை குறையும். எதிர்பாராத செலவு இருக்கும். அலுவலகத்தில் பிறர் விஷயத்தில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களின் தொந்தரவை சமாளிக்க வேண்டிவரும்.
சிம்மம்: முகமலர்ச்சியுடன் காணப்படுவீர். நீண்டநாள் விருப்பங்களை பூர்த்தி செய்துக் கொள்வீர்கள். கணவன் மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு. தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகரீதியாக பயணம் மேற்கொள்வீர்.
கன்னி: பணவரவு உண்டு. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். புது கருத்துகளால் சுற்றியிருப்பவர்களை கவருவீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடக்கவும். வியாபாரரீதியாக பயணங்கள் மேற்கொள்வீர். உத்தியோகம் சிறக்கும்.
துலாம்: குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்படவும். அலுவலகத்தில் கோப்புகளை கவனமாக கையாளவும். வியாபாரத்தில் வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். புதிய பங்குதாரர்களின் ஆலோசனைகளை கேட்டு நடக்கவும்.
விருச்சிகம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உண்டு. குழப்பங்கள் நீங்கி முக மலர்ச்சியுடன் காணப்படுவீர். பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர். ஓரளவு லாபமுண்டு. அலுவலகத்தில் நிம்மதி பிறக்கும்.
தனுசு: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போகவும். பூர்வீக வீட்டை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். உடன் பிறந்தவர்களின் ஆதரவு உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு வரும். அலுவலகரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் ஆதாயம் உண்டு.
மகரம்: சொந்த ஊரிலிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். புது அனுபவம் கிடைக்கும். புதிதாக வாகனம் வாங்கும் அமைப்பு ஏற்படும். தாயாரின் உடல்நிலை சீராகும். அலுவலகத்தில் தடைபட்ட பணிகள் முடியும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
கும்பம்: வெற்றி பெற்ற மனிதர்களின் நட்பு கிட்டும். பெரிய திட்டங்கள் தீட்டுவீர். தினந்தோறும் எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் உயர்ந்த இடத்தைப் பிடித்து நல்ல பெயர் பெறுவீர். அலுவலகத்தில் மதிப்பு, மரியாதை உயரும்.
மீனம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர். உங்கள் உழைப்புக்கு பாராட்டு கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்சினையில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். குழப்பங்கள் நீங்கி அலுவலகத்தில் நிம்மதியுண்டு.
|
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT