Published : 13 Oct 2025 06:14 AM
Last Updated : 13 Oct 2025 06:14 AM
மேஷம்: வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வாகனத்தை மாற்றுவீர்கள். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்கள், பிரபலங்களை சந்திப்பீர். வியாபாரத்தில் நீண்ட காலமாக எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.
ரிஷபம்: நவீன மின்னணு சாதனங்கள் வாங்கி மகிழ்வீர். குழப்பம் நீங்கி குடும்பத்தில் நிம்மதி கிட்டும். நெடு நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரம் சூடு பிடித்து நல்ல லாபம் பார்க்கலாம். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
மிதுனம்: தம்பதிக்குள் இருந்த ஈகோ பிரச்சினை தீரும். அக்கம் பக்கத்தினரை அனுசரிந்து நடந்து கொள்ளவும். பூர்வீக வீட்டை சீரமைப்பீர். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். விவாதங்களில் தலையிடாமலிருப்பது நல்லது. வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
கடகம்: குடும்பத்தினரை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர். பிள்ளைகள் ஒத்துழைப்பார்கள். நண்பர்கள் உங்களைப் புரிந்து கொள்வர். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.
சிம்மம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். தங்கம், வெள்ளி ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பர். ஓரளவு லாபம் பார்க்கலாம்.
கன்னி: நெருங்கிய உறவினர்களால் செலவுகள் வரும். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரரீதியான பயணங்களால் அலைச்சல் ஏற்படும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர். விவாதங்களை தவிர்க்கவும்.
துலாம்: எதிர்பாராத பணவரவால் பழைய கடனை பைசல் செய்வீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் பணிச்சுமை குறையும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர்.
விருச்சிகம்: மனைவிவழியில் செலவு, மன உளைச்சல் வந்து போகும். விவாதங்களை தவிர்க்கவும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் இணக்கமாக செயல்படவும். வியாபாரம் சிறக்கும். வாடிக்கையாளர்களிடம் கனிவாக பேசவும்.
தனுசு: திட்டமிட்ட பணிகளை விரைந்து முடிக்கவும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும். விவாதம் தவிர்க்கவும்.
மகரம்: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பர். அரசு வேலைகள் முடிவுக்கு வரும். அலுவலகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி வரும்.
கும்பம்: தம்பதிக்குள் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். சொந்த ஊர்பயணங்கள் உற்சாகம் தரும். வங்கியில் கேட்ட லோன் கிட்டும். அலுவலகத்தில் புதிய பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர். மேலதிகாரிகள் பாராட்டுவர். வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
மீனம்: சகோதர வகையில் இருந்த பிரச்சினை விலகும். கலைப் பொருட்கள் வாங்கி வீட்டை அலங்கரிப்பீர். புது வேலை அமையும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்த முயற்சிப்பீர். புதிய பங்குதாரர்கள் ஆதரவு தருவர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும்.
|
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT