Published : 12 Oct 2025 06:42 AM
Last Updated : 12 Oct 2025 06:42 AM

மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 12 அக்டோபர் 2025

மேஷம் : அரசு காரியங்களில் இருந்த தடைகள் விலகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். பங்குதாரர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கவும். அலுவலகத்தில் நிம்மதியுண்டு. வெளியூர் பயணங்கள் மகிழ்ச்சி தரும்.

ரிஷபம் : ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர். அலுவலகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவர். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்தும் முயற்சியில் இறங்குவீர். ஓரளவு லாபம் உண்டு.

மிதுனம் : குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போகவும். குலதெய்வ வழிபாடு செய்ய சொந்த ஊர் செல்வீர். மகனின் படிப்பு, மகளின் திருமணம் தொடர்பாக அலைச்சல் இருக்கும். வியாபாரத்தில் போட்டி கூடும். அலுவலகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்.

கடகம் : குடும்பத்தாரின் ஒத்துழைப்பு கூடும். சேமிக்கும் எண்ணம்மனதில் தோன்றும். பிள்ளைகளால் பெருமை அடைவீர். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் வேற்றுமொழி பேசுபவர்கள் ஆதரவு தருவர். புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள்.

சிம்மம் : ஒதுங்கியிருந்த உறவினர், நண்பர்கள் ஓடி வந்து பேசுவர். தம்பதிக்குள் நெருக்கம் கூடும். வியாபாரத்தில் பழைய பாக்கி வசூலாகும். பங்குதாரர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகத்தில் பணிச்சுமை கூடும். உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்க போராடுவீர்.

கன்னி : பிள்ளைகளின் பிடிவாதம் குறைந்து உங்கள் பேச்சுக்கு செவி சாய்ப்பார்கள். மகளுக்கு திருமணம் கூடி வரும். வியாபாரத்தில் வராக்கடன் வந்து சேரும். மக்கள் அதிகம் கூடும் இடத்துக்கு கடையை மாற்றுவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்து விடவும்.

துலாம் : பணவரவு கூடும். கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வியாபாரம் விறுவிறுப்பாக அமையும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகரீதியாக வெளியூர் பயணங்கள் மேற்கொள்ள நேரும்.

விருச்சிகம் : அலைச்சல், காரியத் தடைகள் வரக்கூடும். அக்கம் பக்கத்தினரின் அன்புத் தொல்லை குறையும். வெளிவட்டாரத்தில் நிதானம் தேவை. வியாபாரரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

தனுசு : எதிர்பார்த்த உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். தெளிவான முடிவுகளால் தொல்லை நீங்கும். யோகா, ஆன்மிகத்தில் நாட்டம் உண்டு. வியாபாரம் சூடு பிடித்து ஓரளவு லாபம் கிட்டும். அலுவலகத்தில் இழுபறியாக இருந்த பணிகளை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.

மகரம் : வெளிவட்டாரத்தில் கவுரவப் பதவிகள் தேடி வரும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புது வேலை அமையும். அரசால் அனுகூலம் உண்டு. வாகனப் பழுது நீங்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்து விடவும். வியாபாரத்தை பெரியளவில் விரிவுபடுத்துவீர்.

கும்பம் : சோர்வு நீங்கி சுறுசுறுப்படைவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் நட்புறவாடுவர். வியாபாரத்தில் புதிய பங்குதாரர்கள் கிடைப்பர். அதிகளவில் சரக்குகளை கொள்முதல் செய்வீர். அலுவலகத்தில் பொறுப்புகள் கூடும். உயர் பதவிக்கு பரிந்துரை செய்யப்படுவீர்கள்.

மீனம் : திட்டமிட்ட பணியை முடிக்க போராட வேண்டி இருக்கும். எதிலும் நிதானமாக செயல்படுவது நல்லது. முக்கிய பிரமுகர்களின் உதவியுடன் சில காரியங்களை முடிப்பீர். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் ஏற்றம் காண்பீர்.

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x