Published : 29 Jul 2020 06:55 AM
Last Updated : 29 Jul 2020 06:55 AM
மேஷம்: மற்றவர்களை அனுசரித்துச் செல்லுங்கள். கணவன் - மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். அடுத்தவர்களை குறை கூறுவதை நிறுத்துங்கள். வாகனம் செலவு வைக்கும்.
ரிஷபம்: சகோதரர் வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வீட்டை ரசனைக்கேற்ப அழகுபடுத்துவீர்கள்.
மிதுனம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாக பேசத் தொடங்குவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு கூடும். கலைப்பொருட்கள் வாங்குவீர்கள்.
கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். பழைய நினைவுகளில் அடிக்கடி மூழ்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.
சிம்மம்: புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். தாயாருடன் எதிர்பாராது மோதல் வந்து நீங்கும்.
கன்னி: விருந்தினர்களின் வருகை அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள்.
துலாம்: நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். மனதுக்கு இனிய செய்திகள் வரும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.
விருச்சிகம்: முன்கோபத்தை தவிர்த்து உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்லுங்கள். திடீர் பயணம் ஏற்படலாம்.
தனுசு: எப்போதும் வேலை இருந்துகொண்டே இருப்பதாக சலிப்பு ஏற்படும். பிள்ளைகளால் அலைச்சல் இருக்கும். பயணங்களின் போது கவனம் தேவை. தாயாரின் ஆதரவு கிடைக்கும்.
மகரம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். சகோதரர்களால் பயன் அடைவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்.
கும்பம்: சிந்தனைத் திறன் பளிச்சிடும். சுறுசுறுப்புடன் செயல்பட்டு காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு.
மீனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். இழுபறியாக இருந்துவந்த வேலைகளை உடனடியாக முடிப்பீர்கள். வீடு, மனை வாங்குவதற்கான காலம் கனிந்து வரும். பணவரவு திருப்தி தரும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT